Skip to main content

Posts

Showing posts from June, 2020

ஒரு கொலை அனுபவம் என்கிற புதுமைப்பித்தன் கதை

அழகியசிங்கர் இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள்.  எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய வேண்டுமென்று தோன்றியது. பக்கம் குறைவாக உள்ள கதையாக எடுத்துக்கொள்ளலாமென்று பட்டது.  புதுமைப்பித்தன் 97 கதைகள் எழுதி உள்ளார்.  ஜøன் 30ல் மரணம் அடைந்தார்.  1948ஆம் ஆண்டு.   இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் பெயர் 'ஒரு கொலை அனுபவம்.'   ஊழியன் என்ற பத்திரிகையில் 22.02.1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. சாதாரண  ஒன்றரைப்  பக்கம் கொண்ட கதையில் புதுமைப் பித்தன் நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார். கதைசொல் லி சொல்வதுபோல் இந்தக் கதை ஆரம்பமாகிறது. இது ஒரு தானே சொல்கிற கதை.   இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடிக் கொண்டு வருகிறான்.   ரோட்டில்  ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டும்தான் இருக்கிறது.  வருகிற மனிதன் விளக்கு இருக்கும் இரும்பு கம்பத்தில் ஏறி குறுக்கில் அமர்ந்து கொண்டு விடுகிறான்.  உட்கார்ந்து கொண்டு 'ராஜாதி ராஜன்' என்று பாடுகிறான்.   இப்போதுதான் அவன்...
புதுமைப்பித்தன் ஒரு கொலை அனுபவம் இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை விளக்கு. அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. ஆசாமி தைரியசாலி யாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன். இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான். ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு ‘ராஜாதி ராஜன் நானே' என்று பாடுகிறானே. அவனும் ராஜன்தான்! இவனுக் கும் ஹிட்லருக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான். எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ? விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு...

அஞ்சலட்டைக் கதைகள் 17

அழகியசிங்கர் இது என் 17வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திஙூருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  அறை நீங்கள்  போன்  செய்து என்னைப் பார்க்க வருவதைப் பற்றி அறிவித்துள்ளீர்கள்.  நீங்கள் ஏன் வர வேண்டும்?  உண்மையாக நீங்கள் வருவது எனக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் உங்கள் முகத்துக்கு நேரே அப்படிச் சொல்வதில்  எனக்குத்  தயக்கமிருக்கிறது. அவசரம் அவசரமாக என் கண்ணில் தட்டுப்படும்  புத்தகங்களை  என் புத்தக அறையில் கொண்டு போட்டேன்.  பின் அறைக் கதவை நன்றாகப் பூட்டினேன்.” எந்தப் புத்தகமும் உங்கள் கண்ணில் படாது என்று உறுதியாக நம்பினேன். உங்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது.  எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டு விடுவீர்.  உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும்.  எத்தனைப் புத்தகங்களை எல்லாரிடமிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடல...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 148

அழகியசிங்கர்   ஒவ்வாச் சுருதி   ராஜசுந்தரராஜன்  குளிர் கண்டிருந்தது காற்றில்,  என்னவோ செய்தது என் உடம்புக்கு.  கட்டுக்கயிறில் நிம்மதியற்றுப்  பரபரத்தது வீட்டு நாய்.  கட்டற்றுப் புணர்ந்தன தெரு நாய்கள் . விடலை என்  எதிரே தோன்றி  ஒரு விற்பனைக்காரி  வேண்டுமோ என்றாள் முழம் மல்லிகை. நன்றி :  உயிர் மீட்சி - ராஜசுந்தரராஜன் - இது ஓர் அன்னம் வெளியீடு - வெளியான ஆண்டு : 1986 - விலை ரூ.5.

மாலதி சுவாமிநாதனின் காக்கைகள் என்ற கதை

அழகியசிங்கர்   தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா...கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!. இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லாக் காக்கைகளும் ஒன்று  போலத்  எனத் தோன்றும். அவற்றுக்கு நம்மை அடையாளம்  தெரியுமாம் . காக்கைகளுக்கு இங்கே நிலவுவது  லாக்டவுன் ,  கோவிட் -19 என்று தெரியவில்லை.  தங்களுக்கு உணவு தருபவரைக் காண விரும்பின. அவள் கண்ணில் பட்டாள். ஆனால்   ஆடாமல், அசையாமல் இருக்கிறாளே?  ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது. மறு நாளும். அதே நேரத்தில் வந்தது  காக்கை  கூட்டம். கா...கா..என்று குரல் எழுப்பியது . சற்று நேரம் காத்திருந்து, பிறகு எல்லாக் காக்கைகளும்  பறந்து விட்டன. அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய...

இன்னும் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி..

அழகியசிங்கர் சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அதைப் பற்றி கூடிய சீக்கிரத்தில் என் அறிவுக்கு எட்டியவரை எழுதலாமென்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பெயர் தாவோ தே ஜிங் (தாவோயிசத்தின் அடித்தளம்) லாவோ ட்சு என்பவர் ஆசிரியர்.  அதை சாரமும் விசாரமும் செய்திருப்பவர் சந்தியா நடராஜன். அந்தப் புத்தகத்திற்கு இந்த ஆண்டு ஆத்மாநாம் விருது கொடுத்து கௌரவம் செய்திருக்கிறார்கள்.  விருது பெறப்போகிறவருக்கும் வாழ்த்துக்கள்.  விருது கொடுக்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.    அடிக்கடி நானும் நடராஜனும் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோம்.  யார் கண்ணோ பட்டுவிட்டது.  4 மாதங்களாகப் பார்க்கவில்லை.  கொரோனா பிரித்து விட்டது.  இது குறித்தும் தாவோ எதாவது எழுதியிருப்பார்.  கண்டு பிடிக்க் வேண்டும்.

சூம் மூலமாக ஐந்தாவது கவிதை வாசிக்கும் கூட்டம்

அழகியசிங்கர் விருட்சம்  ஐந்தாவது   சூம்   கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை  26.06.2020 (வெள்ளிக்கிழமை)  அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.  கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்கள்  பின்வருமாறு :  1.  லாவண்யா  2. மனோன்மணி புது எழுத்து 3.  சத்தியானந்தன்  4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன்  6. எஸ்.லக்ஷ்மணன் azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Reading 5 Time: Jun 26, 2020 07:00 PM India Join Zoom Meeting https://us04web.zoom.us/j/ 71479569401?pwd= cmJ2SXI3OW1DVDcxYkUxd1NIcUJVUT 09 Meeting ID: 714 7956 9401 Password: poem26

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..

அழகியசிங்கர்                                                                                                                         (தொடர்ச்சி..) திரும்பவும் சந்திப்பு நிகழ்கிறது.  பா ராகவன் குறித்து நாவலைப்  பற்றிப்  பேச. ஜெகன்  : வணக்கம். மோகினி : வணக்கம். அழகியசிங்கர்  : வணக்கம். ஜெகன்  : யதி நாவலை நானும் முழுவதுமாகப் படித்து விட்டேன்.  மோகினி : இந்த நாவலை இலக்கியத் தரமான நாவலாகக் கருதுகிறீர்களா? அழகியசிங்கர்  : நிச்சயமாக. பரிசுக்குரிய நாவலாகவும் கருதுகிறேன். ஜெகன்  : நம்ப முடியாத சம்பவம் இதில் நிறைய இருக்கின்றன. அழகியசிங்கர்  : நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்...

அஞ்ச லட்டைக் கதைகள் 16

அழகியசிங்கர் இது என் 16வது கதை.  கதையைப் படிக்க  ஒரு  நிமிடத்திலிருந்து  இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  தூ.... எதிரில் கனகா வந்து கொண்டிருந்தாள்.   கா லி ல்  செருப்பில்லாமல்.  எப்போதும் இந்தத் தெருவில் நடக்கும்போது  துப்பிக்கொண்டே  நடப்பாள்.   ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்து, 'துப்பாதே.   காலில்  செருப்புப் போட்டுக்கொண்டு நட,', என்பேன். அவள் சரி சரி என்று தலை ஆட்டுவாள்.  திரும்பவும் அதே மாதிரிதான்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைக் கூட்டிக்கொண்டு வருவாள். நாய்களும் எங்கள் வீட்டுக  வாசல்  முன் மூத்திரம் போகும்.  நான் 'ஹே ஹே' என்று கத்துவேன்.  கனகாவைப் பார்த்து, ' நாய்களைக் கொண்டு வராதே,'  என்று கத்துவேன்.  உண்மையில் நான் சொல்வதைக் கேட்டு தெருவில் துப்புவதை நிறுத்திவிட்டாள்.  கொஞ்சம் திருந்தி விட்டாளென்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் செருப்பு ...

இன்று தந்தையார் தினமா..

அழகியசிங்கர் காலையில் ஒரு வாழ்த்துச் செய்தி வந்தது.  தந்தையார் தின வாழ்த்துக்கள் என்று.  தந்தையார் தினமா என்று தெரியவில்லை.  இன்று அவரைப் பற்றி நினைத்துக்கொள்வோமே என்று தோன்றியது. என் அப்பாவைப் பற்றி  உயர்வாகச்  சொல்வதற்குப் பல விஷயங்கள் உண்டு.  அவருடைய பிள்ளைகளை அவர் அடித்ததில்லை.  கோபித்துக் கொண்டது இல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர் ஏன் கோபப்படுவதில்லை என்று.  மேலும் அவர் யாருடன் பழகும்போது கோபப்பட்டதே இல்லை.   அவருக்குப் போதை  வஸ்துக்கள்  பழக்கமில்லை.  சிகரெட்   பழக்கம்மட்டுமல்ல   வெற்றிலை   பாக்கு  கூட பயன்படுத்த மாட்டார்.   அவருக்குச்  சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் எல்லாம் கிடையாது.    அவருடைய பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளவில்லை.  90 வயதுக்கு மேல் ஆனாலும் தரையில் அமர்ந்து கொண்டு காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பார்.   அவர் நான் பயமுறுத்துகிற மாதிரி பெரிய பெரிய புத்தகங்களைப் படிக்க மாட்டார்.  பின்னால்தான் என்...