அழகியசிங்கர்
ஏழு வரிக் கதைக்கு முக்கிய காரணம் நகுலன்தான். அவர் ஞானரதம் அக்டோபர் 1972ல் மூன்று நொடிக் கதைகள் எழுதி உள்ளார். அதைப்படித்துப் பார்த்தப் பிறகு அதே மாதிரியான முயற்சியை ஏன் எற்படுத்துக் கூடாது என்று தோன்றியது. இதோ நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
கதை ஒன்று
ஆஸ்பத்திரி.
அறையில் அவன்.
ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்
நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.
யாரும் இல்லை. மறுபடியும் தூங்கி விட்டான்.
அவ்விருவரும் வெளியில் வந்தனர்.
முதல்வன் : ஏன்?
மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை.
கதை இரண்டு
அவளுக்கு ஐந்து வயது.
தாயிடம் விரைந்து சென்றாள்.
"அம்மா உன்னை யாரோ பார்க்க வந்திருக்கார்."
"üயாருடி?"
"தெரியல்லே, அம்மா, கேட்டதுக்கு உனக்குத் தெரியும்கிறார்."
அவள் வெளியே வந்ததும், அவனைப் பார்த்தாள்.
அவள், "குழந்தை வருவதற்கு முன் போய் விடுங்கள். உங்களுடன் இனியும் என்னால் அவஸ்தைப்பட முடியாது,"
அவன்,"அலமு, நான் சொல்வதைக் கேள்...."
அவள் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றாள்.
அவன் சிறிது நேரம் நின்றுவிட்டுப் பிறகு ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலில் ஏறினான்.
கதை மூன்று
கடைத் தெரு.
பகவட 12 மணி.
நல்ல வெயில்.
அவள் பார்க்க மிக அழகாக இருந்தாள்.
பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.
üüஐயா, யாருக்குமே என் மீது இரக்கமில்லையா? ஒத்தராவது எனக்குத் தாலிப் பிச்சை தர மாட்டீங்களா?ýý
கூட்டத்தில் ஒரு கூட்டச் சிரிப்பு.
üüபைத்தியண்டா,ýý என்ற கூக்குரல்
அப்பொழுது அவள் விழித்துக் கொண்டாள்.
Comments