Skip to main content

எழு வரிக் கதைகள்





அழகியசிங்கர்
1.சிகரெட் பிடிப்பவன்...



நானும் என் மனைவியும் தெருவில் நடந்து சென்றோம்.  தெரு முனையில் வாலை ஆட்டியபடி மாடுகள்.  வீரபாகு திரும்பவும் மாடு வியாபாரமும் பால் வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறான்.  அவனைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை.  கோடம்பாக்கம் ரோடில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம்.  வண்டி ரிப்பேர் என்பதால் வண்டியில் செல்லவில்லை.  மசூதி தெருவில் தனியாக இருக்கும் மாமியார் வீட்டிற்குத்தான் சென்று கொண்டிருந்தோம்.  தெருவில் ஒரு இடத்தில் நாலைந்து இளைஞர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நான் சிகரெட் பிடிப்பேன்," என்றேன் மனைவியிடம்.
அவள் பேசாமல் வந்து கொண்டிருந்தாள்.  நான் திரும்பவும் அதையே சொன்னேன்.
"நான் நம்பவில்லை," என்றாள் அவள்.
"நீ நம்ப வேண்டும், அவ்வளவுதானே,," என்று ஒரு பெட்டிக் கடையை நோக்கிச் சென்றேன்.  கடைக்காரனைப் பார்த்து, "ஒரு சிகரெட்" என்றேன்.  "என்ன பிராண்ட்" என்று கேட்டான்.  "ஏதோ ஒன்று," என்றேன்.  அவன் ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.  அதைப் பற்ற வைத்துக் கொண்டேன்.  மனைவி முன் சிகரெட்டை ஊதினேன்.  அவள் சிரித்தாள்.  "இப்பவாவது தெரிந்து கொள்.. நான் சிகரெட் பிடிப்பேன்" என்றேன்.  அவள் மௌனமாக இருந்தாள்.
"என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்று கேட்டேன்.
"இப்பவும் சொல்கிறேன்...உங்களால் சிகரெட் பிடிக்க முடியாது," என்றாள்.
கையிலிருநத சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, அவளுடன் அமைதியாக நடந்தேன்.

2.  பெயரை மாற்றிப் பார்


 நாங்கள் இருவரும் ஒரு பஸ்ஸில் தியோசபிகல் சொûஸட்டிக்குச் சென்று கொண்டிருந்தோம்.  "ஓரு கவிதை சிறந்தது என்று எப்படித் தெரியும்," என்று கேட்டேன்.
"கவிதை உயிரோடு இருக்க வேண்டும்.  அதுதான் சிறந்த கவிதை," என்றார்.
"உயிரோடு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது,"என்று கேட்டேன்.
"அது உமக்குப் புரியாது,ý"என்றார்

பின் நாங்கள் இருவரும் தியோசபிகல் சொûஸட்டி கட்டடத்திறகு உள் சென்றோம்.  அவர் ஒவ்வொரு மரம் முன் நின்று நின்று வந்தார்.  ஒரு மரம் குள்ளமாக இருந்தது.  அடர்த்தியாய இலைகள் இருந்தன.  ஒரு மரம் நீண்டு இருந்தது.  அந்த மரத்தின் பெயரை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.  ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு பெரிய பாறாங்கல் இருந்தது.  ஏன் அதை கையால் அவர் புரட்டினார் என்று தெரியவில்லை.  நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கருந்தேள் கண்ணில் தட்டுப் பட்டது.  எனக்கும் அவருக்கும் திகைப்பு.

பின் அங்கிருந்து வறண்ட குளம் கிட்டே போய் நின்றோம். üüஉன் பெயரை மாற்று,ýý என்றார் பின்  ஒரு பேப்பர் பேனாவை எடுத்து என் பெயரை மாற்றி எழுதினார்.  அவர் பெயரையும் எழுதினார்.  பின் அந்தக் காகிதங்களை தூக்கி குளத்தில் போட்டார்.  

அன்று நான் வீட்டிற்குத் திரும்பிய பிறகு யோசித்தேன்.  ஏன் அவர் அப்படிச் செய்தார் என்று. 


2.   நேதாஜிதாசன் 


1,  கேள்வி

ஒரு யோகியிடம்  ஒரு பெரிய செல்வந்தர் "பிறப்பதற்கு முன் மனிதன் என்னவாக இருப்பான்" என்று கேட்டான். அதற்கு அந்த யோகி  "எனக்கு எப்படி தெரியும்" என பதிலளித்தார்.அந்த செல்வந்தன் "நீங்கள் ஒரு முற்றும் உணர்ந்த யோகி. உங்களுக்கு தெரிந்திருக்கும்" என சொன்னார்.மீண்டும் அந்த யோகி பேச ஆரம்பித்தார் "நான் யோகி தான் ஆனால் இன்னும் பிறக்கவே இல்லை".
அந்த செல்வந்தன் பயங்கர குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த யோகி தன் அருகில் இருந்த சீடனிடம் சொன்னார் "இவர்களை கேள்வி கேட்க இயலவில்லை என்ற நிலையில் வைத்திருக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு" என.அந்த சீடன் ஒரு இருபது நொடிக்கு சிரிப்பை நிறுத்தவில்லை

Comments