அழகியசிங்கர்
காலம்
வண்ண நிலவன்
காலத்தை என்ன செய்யப்
பேனாவைக் கைக் குட்டையைத்
தொலைப்பது போல் காலத்தைத்
தொலைக்க முடிய வில்லை.
காலம் காட்டும் கடிகாரம்
காலம் பற்றி அறிந்ததில்லை
பறப்பன, ஊர்வன, பஸ் ஸடாண்டில்
படுத்திருக்கும் பரமசாது பசுக்கள்
முகம் பார்க்கும் கண்ணாடிக் குருவிகள்
எதற்கும் காலம் பற்றிய
விழித்தாலும், உறங்கினாலும்
வீணே என்னுடனிருக்கும்
காலத்தை என்ன செய்ய?
நன்றி : காலம் - வண்ணநிலவன் - பக்கம் : 64 - அன்னம் (பி) ஙூட் , 2 சிவன் கோயில் தெற்குத் தெரு, சிவகங்கை - 623 560 - விலை : 13 - வெளியான ஆண்டு : 1994
Comments