Skip to main content

சுவாமி விவேகானந்தர் பற்றி..1

 

12.01.2020






அழகியசிங்கர்







1894 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்ததால் அவர் படிப்புக்குத் தடை ஏற்பட்டது.  வீட்டில் வறுமை தாண்டவமாட அவர் வேலை தேடிப் போகும்படி நேர்ந்தது.

சிலகாலம் கழித்து, ஒருநாள் இராமகிருஷணர் நரேந்திரநாத்தைப் பார்த்து,  அன்று மாலையில் அன்னை காளியின் கோயிலுக்குச் சென்று, வாட்டும் வறுமையிலிருந்து அவரது குடும்பத்தை விடுவிக்குமாறு வேண்டி வரச் சொன்னார்.

அந்த நாள் ஒரு மங்கலமான நாளாகவிருந்தது.  அவருடைய விருப்பத்தை அன்னை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்று அவருக்கு இராமகிருஷ்ணனர் உறுதியளித்தார்.  நரேந்திரநாத்தும் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன்னே நின்று வேண்டினார். ஆனால் அவர் கேட்ட வரமோ அவருக்குப் பகுத்தறியும் ஆற்றல், பற்றொழித்தல், பக்தி ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதே.

âââââââââââââ
 
தான் இறப்பதற்குச் சற்று முன்பு, ஒருநாள், இராமகிருஷணர் நரேனை தனது படுக்கையருகில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி மறைந்தார்.  அப்போது, தன்னுடைய உடம்பில், மிக அதிக மின்னழுத்தமுள்ள மின்னோட்டத்திற்குச் சமமான ஒரு விவரிக்கவியலாத மாபெரும் சக்தி பாய்வதை விவேகானந்தர் உணர்ந்தார்.  சிறிது நேரம் சென்றபின் ராமகிருஷ்ணர் பௌதீக உலகப் பிரக்ஞையை மீண்டும் பெற்றபிறகு, "இன்று என்னிடம் உளதெல்லாம் உனக்குக் கொடுத்துவிட்டேன்.  இப்போது நான் ஒன்றுமில்லாத சாதாரண பிச்சைக்காரன்.  நான் உனக்களித்த சக்திகளைக் கொண்டு, நீ இவ்வுலகில் பெரிய செயல்களைச் சாதிப்பாய்.  அதுவரையில் நீ எவ்விடத்திலிருந்து வந்தாயோ அவ்விடத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டாய்" என்று கூறினார்.

ஆம், ராமகிருஷ்ணரின் முடிவு 1886 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ம் நாள் வந்தது.

Comments