Skip to main content

சர்வேஷின் கதைகள் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குச் சென்றேன்.

அழகியசிங்கர்



எனக்குப் பிடித்த ஆர்யகவுடர் ரோடில் உள்ள வல்லப விநாயக கோயில் அருகில் உள்ள ஸ்ரீனிவாசன் தெருவில் உள்ள வி எம் எ ஹாலில் கூட்டம். எளிமையான கூட்டம்.  சத்யா ஜிபி அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் பெயர்தான் சர்வேஷின் கதைகள்.

கூட்டத்தில் எனக்கும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.  சத்யாவின் கதைகளை அவருடைய தாயார் படித்து கதைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்வார் என்று சத்யா குறிப்பிட்டார். 17 கதைகள்  170 பக்கங்கள் கொண்ட புத்தகம்.  

சத்யாவை அவருடைய கதை ஒன்றை எடுத்து அது பற்றி கூறி விளக்கும்படி கேட்டுக்கொண்டேன்.  சி பி ராமசாமி ரோடு என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார். 

நான் வீட்டிற்கு வந்தவுடன் அந்தக் கதையைத்தான் வாசித்தேன்.  

அந்தக் கதையில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார். 'கடிகாரப் பெண்டுலத்தை நிறுத்த முடிகிறது.  போராட்டம் நடத்தி இயங்கும் தொழிற்சாலையை நிறுத்த முடிகிறது.  தெருவில் ஒரு பேரணி, ஒரு ஊர்வலம் என்று சொல்லி போக்குவரத்தை நிறுத்த முடிகிறது.  ஆனால் யோசிகத்தபடி அலைபாயும் மனத்தைத்தான் நிறுத்த வழியில்லை '  என்று எழுதியிருக்கிறார்.

இவருடைய மற்ற கதைகளையும் படித்துப் பார்க்க வேண்டும். 


Comments