Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -90



அழகியசிங்கர்  



     மனதுக்குப்பிடித்த கவிதைகள் என்ற தொகுப்பில் முதலில் 100 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  கூடிய சீக்கிரம் புத்தகம் உருவாகிவிடும்.முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள் இரண்டாவது தொகுப்பில் இடம் பெறும்.  இரண்டாவது தொகுதியிலும் விடுப்பட்ட கவிதைகள் மூன்றாவது தொகுதியில் வந்து விடும்.  ஒவ்வொரு தொகுதியும் 100 கவிதைகள் கொண்ட புத்தகம். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது.  கவிதைகள்தான் முன்னுரை. கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவை வெளிப்படுத்தும் விதத்திலிருந்து  தங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  .   பெரும்பாலும் இக் கவிதைகள் யாவும் கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிவருகின்றன. 

 இனி வாழ்நாளில்


தேன்மொழி தாஸ்



இனி வாழ்நாளில்
கடவுளைக் காணவே இயலாது 
என்ற சத்தியத்திற்குப் பின் 
எனது நாய் குட்டியை 
சர்வ வல்லமையுள்ள கடவுளே 
என அழைக்கத் துவங்கினேன்




நன்றி :  நிராசைகளின் ஆதித்தாய் - கவிதைகள் - தேன்மொழி தாஸ் - மொத்தப் பக்கங்கள் : 56 - வெளியீடு : உயிர்மை பதிப்பகம், புதிய எண் : 79, ப.எண் 39 மேற்கு போயஸ் சாலை (இளங்கோ சாலை - அண்ணா அறிவாலயம் பின்புறம்) தேனாம்பேட்டை, சென்னை 600 018 - செல் எண் : 9003218208 - விலை : ரூ.50 




Comments