Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்



அழகியசிங்கர்



தாமிரபரணி மகா புஷ்கரம் காரணமாக நான் திருநெல்வேலிக்குச் செல்ல நேரிட்டது.  இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்து பல கோயில்களுக்குச் சென்றதும். கல்லிடைக்குறிச்சியில் மகா புஷ்கரத்தில் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.  


திருநெல்வேலியில் வசித்து வரும் வண்ணதாசனை சந்தித்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பேட்டி எடுத்துள்ளேன்.  நான் அவசரம் அவசரமாக அவரைச் சந்தித்தேன்.  முதலில் அவரைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகம் கடைசி வரை என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.  பின் எப்படியோ சந்தித்து விட்டேன்.  பேட்டியும் எடுத்து விட்டேன்.  அவரும் நிதானமாகப் பதில் அளித்திருக்கிறார். வழக்கம் போல சில தடங்கல்கள் பேட்டி எடுக்கும்போது ஏற்படும்.  அது மாதிரி ஏற்பட்டது.  ஆனால் எல்லாவற்றையும் மீறி வண்ணதாசன் சிறப்பாக பதில் அளித்திருக்கிறார்.  அவருக்கு நன்றி. 


Comments