அழகியசிங்கர்
சங்ககாலம் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் தொ பரமசிவன் ஒரு கட்டுரை மேலும் பத்திரிகையில் எழுதி உள்ளார். அக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்குத் தர விரும்புகிறேன் :
"நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியப் பாடல்களின் தமிழ்ப் புலவரின் மூலப்படைப்பு எது, மொழிபெயர்ப்புப் பாடல்கள் எவை என்பது இன்னும் முடிவு செய்யப் பெறவில்லை. கி மு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட தர்மபதத்தில் 7ஆவது பகுதியான அரசந்தவர்க்கம் என்னும் பகுதியில் உள்ள இரண்டாவது பாடலை எடுத்துக்காட்டி ஒளவையாரின் üüநாடாகொன்றோýý என்னும் பாடல் (187) தர்மபதப் பாடலின் நேர் மொழிபெயரப்பு என்பதை மு.கு ஜகந்நாத ராஜா நிறுவி உள்ளார். இதுபோலவே கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே என்ற பாடலும் தர்மபதத்தில் உள்ள மற்றொரு பாடலின் மொழிபெயர்ப்பே என்பார் தெ.பொ.மீ."
இப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. முதலில் ஒளவையாரும், கனியன் பூங்குன்றனனும் எங்கே தம்மபதத்தைப் படித்து இருக்கப் போகிறார்கள்.
Comments