Skip to main content

என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்

முதல் நிலவை எப்போதும் எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன

இரண்டாவது நிலவு குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது

மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்

காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்

நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்கொண்டேயிருக்கும்

வறண்ட மலையின் குன்று

ஐந்தாவது நிலவு மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது

ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக்கொண்டிருக்கிறாள்

ஏழாவது நிலவு எனக்குப் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் ஒரு சொல்.

Comments

sivakumar said…
முழுமை...

வெல்லி தட்டு..

பால் வெலி...
sivakumar said…
முழுமை...

வெல்லி தட்டு..

பால் வெலி...

எனக்கும் அந்த சொல் பிடிபடவில்லை..