முதல் நிலவை எப்போதும் எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன இரண்டாவது நிலவு குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக் காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம் நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று ஐந்தாவது நிலவு மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக்கொண்டிருக்கிறாள் ஏழாவது நிலவு எனக்குப் பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் ஒரு சொல்.