துளி - 188
ஜெயமோகனின் பிறந்ததினம் இன்று
அழகியசிங்கர்
 லக்ஷ்மி மணிவண்ணன் முகநூலில்  பதிவு செய்ததைப் படித்தேன்.  இன்று ஜெயமோகன் பிறந்தநாள்.  அவருக்கு என் வாழ்த்துகள்.
 தமிழ் எழுத்தாளர்களிடையே வித்தியாசமானவர் ஜெயமோகன்.  விஷ்ணுபுரம் என்ற அமைப்பின் மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கௌரவித்துப் பரிசு கொடுக்கிறார்.  
 இதை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்வதில்லை.  ஒரு முறை தேவதச்சனுக்குப் பரிசளிக்கும் விழாவிற்குப் போயிருந்தேன்.  எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதை நேரில் கண்டு கொண்டேன். 
 சதா எழுத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர்.  அவர் மகாபாரதத் தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் பெயரிட்டு ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் தலைப்பு: ஜெயமோகன்.
 ஜெயமோகன்
 ஆயிரக்கணக்கான பக்கங்களில்
 மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
 படிக்கப் படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
 எது மாதிரியான எழுத்தாளர் இவர்
 எப்படியெல்லாமோ யோசனை செய்கிறார்
 என்பது ஆச்சரியம்தான்
 எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
 ஆனால் 
 என்ன செய்வது
 அவர் எழுதும் வேகத்திற்கு
 என்னால் படிக்க முடியவில்லையே.......

ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழா நிறைவு நாளில் (22.08.2001) கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் ஜெயமோகன்.
2000 ஆண்டிலிருந்து ஓராண்டு நாங்கள் ந.பிச்சமூர்த்திக்கு நூற்றாண்டு விழா நடத்தினோம். நாங்கள் என்றால் யார் யார்? ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, வெங்கட் சாமிநாதன், அழகியசிங்கர், ஆர் ராஜகோபாலன், ஆர் வெங்கடேஷ் போன்ற பலர்.இந்த நிகழ்ச்சி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 

Comments