Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 122

அழகியசிங்கர்


கத்தியின்றி ரத்தமின்றி



நாமக்கல் கவிஞர்



கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்
குயிர்ப றித்த லின்றியே
மண்ட லத்தில் கண்டி லாத
சண்டை யன்று புதுமையே!

குதிரை யில்லை யானை யில்லை
கொல்லும் ஆசை யில்லையே
எதிரியென்று யாரு மில்லை
எற்றும் ஆசை யில்லதாய்

கோப் மில்லை தாப மில்லை
சாபங் கூறல் இல்லையே
பாப் மான செய்கை யன்றும்
பண்ணு மாசை யின்றியே

கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!

காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே


நன்றி : நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள் - தொகுப்பு : கு ராஜவேலு - சாகித்திய அக்காதெமி - பக்கங்கள் : 320 - விலை ரூ.50 - முகவரி : குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம் பேட்டை, சென்னை 600 018 


Comments