Skip to main content

Posts

Showing posts from January, 2021

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 152

அழகியசிங்கர் பிரத்யேக பிராணி நெகிழன் யாரை பிடிக்கும் பிடிக்காதென்றெல்லாம் தெரியாது எதற்கு வருகிறது போகிறதென்றும் தெரியாது எதற்கதை கொல்ல வேண்டுமென்றும் தெரியாது எனக்குத் தெரிந்தது அதுவொரு எலி பார்க்கச் சின்னதாக இருக்கும் சிறு தேங்காய் பத்தைக்கோ வடைக்கோ அல்லது தக்காளிக்கோ தன் உயிரையே விடுகிற அல்பம் யாரும் எளிதில் சித்திரவதைச் செய்ய முடிகிற கொல்ல முடிகிற ஜந்து எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை வீர புருஷர்களாக்கும் பிரத்யேக பிராணி. நன்றி : பூஜ்ய விலாசம் - நெகிழன் - வெளியீடு : மணல்வீடு - ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453 தொலைப்பேசி : 9894605371 விலை :ரூ.80 - பக்கம் : 65

சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

  அழகியசிங்கர் 16.01.2021  - சனிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 34வது கவிதை  நேசிக்கும்  கூட்டம் நடைபெறுகிறது. கவிதை வாசிப்பவர்கள் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்கவும். கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்த வகையில் எழுதப்பட்ட கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளை திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்ளபவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மனம் திறந்து வரவேற்கிறேன்.  உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள் . நீங்கள் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். 1. வெள்ளிக்கிழமைக்குப் பதில் சனிக்கிழமை கூட்டம் . 2. கூட்டம் துவங்கும் நேரம் 6.30 மணிக்கு Topic: சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும்  நிகழ்ச்சி Time: Jan 16, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85905310425?pwd=UEl5dGM1RzlnUlpiT0pjeDRwUkRwZ...
14.01.2021 க.பூரணச்சந்திரனின் கதையியல் அழகியசிங்கர் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் 'கதையியல்' என்ற க.பூரணச்சந்திரன் புத்தகம். பல உபயோகமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கண்டெடுத்தேன். பொதுவாக ஒரு புத்தகம் குறிப்பாகக் கட்டுரைப் புத்தகம் ஆரம்பத்தில் இருப்பதுபோல் புத்தகத்தைப் படித்து முடிக்கு முன் இருப்பதில்லை. க.பூரணச்சந்திரனின் புத்தகமும் விதிவிலக்கல்ல. இது என்ன காரணம் என்றால் ஆரம்பத்திலேயே பூரணச்சந்திரன் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி முடித்து விடுகிறார். பின்னால் ஏற்கனவே சொன்னதைச் சொல்கிறாரோ என்று என் மனதிற்குப் பட்டது. இதோ இப் புத்தகத்திலிருந்து உபயோகமான கருத்துக்களை தங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். 200 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 15 பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார். 'வாழ்க்கை விளக்கமும் தப்பித்தலும்' என்ற தலைப்பில் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். அதில் கவனிக்கவேண்டிய சில பகுதிகளை இங்குத் தருகிறேன். கதைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார். 1. வெறும் இன்பத்திற்கான பொழுது போக்குவதற்கான இலக்கியம் ஒரு வகை. 2. வாழ்க்கையில் சற்றே வெளிச்சத்தைய...

சுவாமி விவேகானந்தர் பற்றி..2

அழகியசிங்கர் நேற்று என்  லைப்பரரி  போனபோது தற்செயலாக என் கண்ணில் விவேகானந்தர் பற்றி புத்தகம் கிடைத்தது.  அதைப் படிப்போம் என்று எடுத்து வந்தேன். 168 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்தில்  42 பக்கங்கள் படித்து விட்டேன். கம்பளிட்   ஒர்க்ஸ்  சுவாமி விவேகானந்தர் என்ற புத்தகத்தில் ஒரு பாகமே என்னால் தாண்ட முடியவில்லை.  பெரும்பாலும்  ரேஷன்  கடை முன்னால்  க்யு  நிற்கிற இடத்தில் விவேகானந்தர் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பேன்.  அப்போதெல்லாம் சின்ன வயது.   ஒரு வரி கூட மூளையில் ஏறவில்லை. அரவிந்தர் புத்தகம் இன்னும்  மோசம். சுலபமாகப் படிப்பது ரமணர்,  ஜேகிருஷ்ணமூர்த்தி ,  யூஜி ,  ரஜினிஷ்  இதெல்லாம்தான். விவேகானந்தர் கூறுகிற பொன் மொழிகளை என்னால் ஏற்க முடியவில்லை.  பொதுவாக நான் பொன் மொழிகளையே படிப்பதில்லை.  ஆனால் நேற்று எடுத்துக் கொண்டு வந்த புத்தகம் எனக்குப் படிக்க வேண்டும் போலிருந்தது .  இதை எழுதியவர்  நெமய்   சதன்   போஸ் .  இந்திய இலக்கியச்  சிற்பிகள் ...

சுவாமி விவேகானந்தர் பற்றி..1

  12.01.2020 அழகியசிங்கர் 1894 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்ததால் அவர்  படிப்புக்குத்  தடை ஏற்பட்டது.  வீட்டில் வறுமை தாண்டவமாட அவர் வேலை  தேடிப்  போகும்படி நேர்ந்தது. சிலகாலம் கழித்து, ஒருநாள்  இராமகிருஷணர்   நரேந்திரநாத்தைப்  பார்த்து,  அன்று மாலையில் அன்னை காளியின் கோயிலுக்குச் சென்று, வாட்டும்  வறுமையிலிருந்து  அவரது குடும்பத்தை விடுவிக்குமாறு வேண்டி வரச் சொன்னார். அந்த நாள் ஒரு மங்கலமான நாளாகவிருந்தது.  அவருடைய விருப்பத்தை அன்னை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்று அவருக்கு  இராமகிருஷ்ணனர்  உறுதியளித்தார்.   நரேந்திரநாத்தும்  கோயிலுக்குச் சென்று அன்னையின் முன்னே நின்று வேண்டினார். ஆனால் அவர் கேட்ட வரமோ  அவருக்குப்  பகுத்தறியும் ஆற்றல்,  பற்றொழித்தல் , பக்தி ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதே. âââââââââââââ   தான் இறப்பதற்குச் சற்று முன்பு, ஒருநாள்,  இராமகிருஷணர்   நரேனை  தனது படுக்கையருகில் அமர்ந்து  ஆழ்ந்த  தியானத்தில் மூழ்கி மறைந்தார்...

09.01.2021 சூம் மூலமாக 33வது ஹைக்கூ கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு.

  அழகியசிங்கர் கவிதை வாசிப்பவர்கள் உற்சாகமாக ஹைக்கூ, குறுங்கவிதைகளை வாசித்து மகிழந்தார்கள்.

7.01.2021 சூம் மூலமாக 33வது ஹைக்கூ கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு. திரு மு.முருகேஷ் உரை ஆற்றுகிறார்.

அழகியசிங்கர் ஹைக்கூ குறித்து சிறப்புரை ஆற்றிய திரு. மு.முருகேஷ்.  ஒளிப்பதிவில் கண்டு ரசியுங்கள்.  ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் நிபுணர்.  ஹைக்கூ கவிதைகளுக்காக பல

ரமணிசந்திரன் புத்தகங்கள்

  அழகியசிங்கர்  பழைய பேப்பர்  கடையில் புத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு ரமணி சந்திரன் புத்தகங்கள் ஒருநாள் இருக்கக் கண்டேன் அப்படியே வாங்கிக் கொண்டு (கிலோ  ரூ.70க்கு) புத்தகக் கண்காட்சிக்கு எடுத்துக் கொண்டு விற்க வைத்தேன். எல்லாவற்றையும் உடனே வாங்கிக் கொண்டு போனார்கள் பெண் ரசிகர்கள் பெண் ரசிகர்களின் ஜாடை  ரமணி சந்திரன் சாயலாக இருக்கக் கண்டேன் ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது வாங்கிப் படிக்க வேண்டுமென்று தோன்றியது என்னதான் எழுதியிருக்கிறார்  ரமணி சந்திரன்? நான் தயாரித்த புத்தகங்கள் எல்லாம் பொதுவாகக்  கவிதைப் புத்தகங்கள் கண்ணைக்  கண்ணை விழித்துப் பார்த்தன என்னை.                         28.12.2020

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

  அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து.. அழகியசிங்கர் என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன். திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார். ஒன்று புலிக்கலைஞன். இரண்டாவது கதை எலி . "இரண்டு கதைகளையும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கிறார். அக் கதைகளை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்கள்?" என்று கேட்டார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நான் அக் கதைகளை உடனடியாகப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. அந்த இரவு நேரத்தில் இரண்டு கதைகளையும் படித்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன். அக் கதைகளைக் குறித்து விசேஷமாக யார் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தேன். அக் கதைகளைப் படித்த மன நிறைவை அக் கதைகள் கொடுக்கத் தவறவில்லை. அசோகமித்திரன் கதைகள் புத்தகத்தை ஒரு கெயிட் புத்தகம் மாதிரி கதை எழுத முன் வருபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அவர் கதைகளைக் குறித்து ஒரு பொதுவான சில கருத்துக்கள் சொல்ல விரும்புகிறேன். 1. தொடர்ந்து ஒரு ஆசிரியரின் கதைகளைப் படிக்...