Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 119

அழகியசிங்கர்  


காந்தி ஆசிர்வசிக்காத குழந்தைகள்


சபரிநாதன் 



அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது:
எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா
ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம்
ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கட்த்திப் போய்விட்டது
என் தாத்தாவோ ஒரு சர்பத் குடித்துவிட்டு
வந்து கொத்தத்தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை.

அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால்
அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்..
இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து
நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.


நன்றி : வால் - சபரிநாதன்  - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 168  - விலை : ரூ.150

Comments