Skip to main content

இன்று காமராஜர் பிறந்தநாள்...

அழகியசிங்கர்



காமராஜ் 1903ஆம் தேதி ஜøலை 15ஆம் தேதி பிறந்தவர்.  1953ல் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவருடைய காலத்தில் முக்கியமான இரண்டை செயல்படுத்தினார். ஒன்று இலவச கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்.  எளிமையான மனிதர்.   ஊழல் செய்யத் தெரியாத முதலமைச்சரில் அவரும் ஒருவர்.  இன்னொருவர் அண்ணா. 

அவர் ஒருமுறை மேற்கு மாம்பலத்தில் மேல் கூரை இல்லாத காரில் வந்து கொண்டிருக்கும்போது  கூட்டம் அவரைப் பார்க்கத் துரத்திக்கொண்டு வந்தது.  நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஓடினேன்.  ஆனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை.  பின் பக்கம்தான் பார்க்க முடிந்தது.

திநகரில் அவருடைய வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் அது ஒரு கோயில் என்று தோன்றும். 
  
ஸ்டெல்லா புரூஸ் குடும்பத்திற்கு அவர் நெருங்கிய நண்பர்.  ஒரு முறை விருதுநகரில்   உள்ள அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ஸ்டெல்லா புரூஸ÷ற்கு அறிவுரை கூறும்படி காமராஜரைக் கேட்டுக்கொண்டாராம் ஸ்டெல்லா புரூஸ் தந்தை.  

அதேபோல் காமராஜ் திருமணம் செய்துகொள்ளும்படி அவருடைய அம்மா ஸ்டெல்லா புரூஸ் அப்பாவிடம் கேட்டுக் கொண்டாராம்.  காமராஜரைப் பார்த்து அவர் அப்பா பேசும்போது காமாரஜிடம் அவர் திருமணம் பற்றி ஒரு முறைகூட கேட்டதில்லையாம்.

திருமணம் பற்றி ஒரு முறை கூட காமராஜிடம்  தெரிவிக்காமலிருந்தது.  காமராஜ÷ற்கு ஒரு முறை அவர் அம்மா மூலம் தெரியவந்ததாம்.
தேச ப்பணிக்காக   திருமண வாழ்க்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ளப் போவதில்லை என்ற காமராஜின் கொள்கையில் மிகப் பெரிய மரியாதையும் ஒப்புதலும் இருந்ததால் காமராஜிடம் அவருடைய திருமணம் பற்றி பேசவில்லையாம் ஸ்டெல்லா புரூஸின் அப்பா. 

தேர்தல் நடந்தபோது இராமலிங்கம் என்ற மாணவரிடம் தோல்வி அடைந்தது எவ்வளவு பெரிய  சோகம். 

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காலமானார். காந்திஜி பிறந்த தினம் போது. 

Comments