Skip to main content

50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள்..

அழகியசிங்கர்


இதுவரை 50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள். தொடர்ந்து கவியரங்கக் கூட்டங்களை சூம் மூலமாக நடத்திக்கொண்டு வருகிறேன். 9வாரங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.
நேற்று நடந்த கூட்டம் 9வது கூட்டம். சில திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாய் இன்டெர் நெட் தொடர்பு போனதால் முதல் பாதியில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. என் நண்பர் சுந்தர்ராஜன் திறமையாக நடத்திச் சமாளித்து விட்டார்.
அடுத்த பாதியில்தான் நான் கலந்து கொண்டேன். என் திட்டத்தில் கவிதை வாசிப்பவர்களின் கவிதைகளைக் கேட்டு மற்றவர்களும் தனக்குத் தோன்றுகிற அபிப்பிராயங்களைக் கூற வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது.
நான் மறைந்த கவிஞரின் கவிதைகளை நான் எடுத்துக்கொண்டு வாசிக்கிறேன். இதுவரை திரிசடை, ஆத்மாநாம் என்று வாசித்திருக்கிறேன். நேற்று க.நா.சுவை சரியாக அறிமுகம் செய்து வாசிக்க முடியாமல் போய்விட்டது.
கவிதை எழுதுபவர்களே அவர்களுடைய கவிதைகளை வாய்விட்டுப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.
ஒருவர் வாசிக்கிற கவிதையை எந்த அளவிற்கு நாம் உன்னிப்பாகக் கவனிக்க முடிகிறது. அல்லது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது என்பது எனக்கே விடப்பட்ட சவால் என்று தோன்றுகிறது.
இதை இன்னும் செம்மையாகக் கொண்டு போவதை நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டு வர உள்ளேன். இந்தக் கூட்டத்தை ஒருவரே நடத்த முடியாது. கவிதை வாசிப்பவரும், கவிதையை ரசிப்பவரும் சேர்ந்து நடத்தும் கூட்டமாக நான் நினைக்கிறேன்.
இதுவரை யார்யார் எந்தந்த தேதிகளில் கவிதைகள் வாசித்தார்கள் என்ற பட்டியலைத் தர நினைக்கிறேன்.
1) 29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி 2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம் 4. திருக்கூனன் கண்டராதித்தன்.
2) 05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 4. பானுமதி 5. உமா பாலு 6. வசந்த தீபன 7 ஆர்.கே 8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்
3) 12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியன் 3. ப்ரியம் 4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்
4) 19.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. வ.வே.சு 2. நாகேந்திர பாரதி 3. தில்லை வேந்தன் 4. சதூர் புஜன் 5. அன்புச்செல்வி
5) 26.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன் 6. எஸ்.லக்ஷ்மணன்
6) 03.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. கவிஞர் கா.ந.கல்யாண சுந்தரம் 2.. கவிஞர் கனகா பாலன் 3. கவிஞர் பத்மஜா நாராயணன் 4. கவிஞர் நிஷாந்தன் (34 பேர்கள்)
7) 10.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. தஞ்சாவூர் கவிராயர் 2. வேல் கண்ணன் 3. புலவர் பூ.அ. ரவீந்திரன் 4. கீர்த்தி கிருஷ். 5. திரிசடை கவிதைகள் (39) (குரல் அழகியசிங்கர்)
8) 17.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. ஷா அ 2. க.வை பழனிசாமி 3. தென்றல் சிவக்குமார் 4. சிறகா 5. ந. இந்திராணி 6. ஆத்மாநாம் கவிதைகள் ( வாசிப்பு : அழகியசிங்கர்) (44)
9) 24.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள்
1. சு.பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர் ஹரணி 4. பிரேமா பிரபா 5. நளினா கணேசன் 6. சோம சுந்தரி
7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பு : அழகியசிங்கர்)
(50 கவிஞர்கள்)

Comments