Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87

அழகியசிங்கர்  

தோன்றி மறையும்

கடற்கரய்


குட்டிக் கைப்பையோடு
உத்யோகத்திற்கு விரையும்
சீனத்துக்காரி வெளியேறுவதற்கு
முன்னதாக ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டைப் பாவாடை குறுஞ்சிரிப்பு
தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்குப் பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள். ஆடியில் விழும் முகம் மெல்ல அலையுறத் தொடங்குகிறது. தலைக்கு அவள் சூடியிருந்த வாசனை மலர்கள் தழைத்து   அரும்புகின்றன
ஒரு வைகறைத் தோட்டத்தின் வைராக்கியத்தோடு.



நன்றி : கண்ணாடிக் கிணறு - கவிதைகள் - கடற்கரய் - 80 பக்கங்கள் - முதல் பதிப்பு : டிசம்பர் 2010 - வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் - 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - விலை : ரூ.60 - தொலைபேசி : 91-4652-402888

Comments