Skip to main content

இரண்டு தகவல்கள்....


அழகியசிங்கர்




முதல் தகவல் :


நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்துவிட்டது.  ஒரு மாதம் மேல் தாமதாகிவிட்டது.  102வது (அசோகமித்திரன் இதழ்) போன மே மாதம் வெளிவந்தது.  ஆகஸ்ட் மாதமே இதழைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.  ஆனால் செப்டம்பர் கடைசியில்தான் கொண்டு வர முடிந்துள்ளது.

இந்த இதழில் ஆறு கதைகள் வெளிவந்துள்ளன.  மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் என்ற பெயரில் அழகியசிங்கரும், விலகும் திரைகளும் சரியும் பிம்பங்களும் என்ற பெயரில் ஸிந்துஜாவும், மாரி என்ற பெயரில் டாக்டர் ஜெ பாஸ்கரனும், முதல் தேநீரின் ருசி என்ற பெயரில் சோ சுப்புராஜ÷ம், மெய் வருத்தம் பாரார் என்ற பெயரில் பிரபு மயிலாடுதுறையும், ஊர்மிளா என்ற தலைப்பில் பானுமதியும் எழுதி உள்ளார்கள்.

இதைத் தவிர, கீழ்க்கண்டவர்கள் கவிதைகள் படைத்துள்ளார்கள். அழகியசிங்கர், ஜோர்டி டோஸ், எம் ரிஷான் ஷெரீப், பிரபு, சுரேஷ் ராஜகோபால், எஸ் வைத்தியநாதன், பொன் தனசேகரன், விஷ்ணு குமாரபிள்ளை, வி விஸ்வநாத், தேவேன்தர் நைய்தானி.

கட்டுரைகளை விட்டல்ராவ், அம்ஷன்குமார், அழகியசிங்கர் முதலியவர்கள் படைத்துள்ளார்கள்.

இந்த இதழிலிலிருந்து விருட்சம் 80 பக்கங்கள் வரை வரும். விலை ரூ.20 தான்.  முகநூல் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுக்க விரும்புகிறேன். விருட்சத்திற்குப் படைப்புகள் அனுப்பி ஒவ்வொரு இதழையும் சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
இரண்டாவது தகவல் :  


2.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படத்தின் நான்குப் பகுதிகளை வெளியிட்டேன்.  இந்த நான்கு பகுதிகளிலும், ஞானக்கூத்தன், கி அ சச்சிதானந்தம், சா கந்தசாமி, அம்ஷன்குமார், திலிப்குமார், தேவிபாரதி, மனுஷ்யபுத்ரன், ஆர் வெங்கடேஷ், பத்ரி போன்றவர்கள் பேசினார்கள்.  உண்மையில் அதற்கு மேலும் அதிகமாகப் பலர் பேசி உள்ளார்கள்.  

க்ளிக் ரவி எனக்கு இரண்டு ஒளித் தகடுகளை அளித்திருக்கிறார்.  ஒரு ஒளித்தகடில் உள்ளவற்றைதான் நான் நான்கு பகுதிகளாகக் கொண்டு வந்தேன்.  இன்னொரு ஒளித்தகடில் உள்ள இன்னும் நான்குப் பகுதிகளை நாளையிலிருந்து வெளியிட உள்ளேன்.  என்னைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான கூட்டம்.  

Comments