அழகியசிங்கர்
54) பாலம்
கள்ளழகர்
அம்மா இறந்து ஓராண்டு கழித்து
திவசத்திற்காக
ஊருக்குப்போயிருந்தபோது
உணர்ந்தேன்
எனக்கும் என் உறவுகளுக்கும்
எனக்கும் என் ஊருக்கும்
இடையே
நீந்திக் கடக்க முடியாத
பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதையும்
இக்கரைக்கும் அக்கரைக்குமாக
நீண்டிருந்த பாலம்
இப்போது இல்லாமலிருப்பதையும்
அறிந்தேன்
என்னில் ஒட்டியிருந்த
ஊர்மண் உதிர்ந்திருப்பதையும்
இரத்தத்தில் ஊறியிருந்த
ஊர் உறைந்திருப்பதையும்
நன்றி : நதிநீர்த் தேக்கத்தின் முகங்கள் - கவிதைகள் - கள்ளழகர் - பக்கங்கள் : 48 - முதல் பதிப்பு : நவம்பர் 2000 - விலை : ரூ.20 - வெளியீடு : தாமரைச் செல்வி பதிப்பகம், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600 078

Comments