அழகியசிங்கர்
அசோகமித்திரனுக்கு அடுத்த வாரம் ஒருநாள் இரங்கல் கூட்டம் நடத்த உள்ளேன். பெரும்பாலும் இதுமாதிரியான நெருங்கிய எழுத்தாள நண்பரின் இரங்கல் கூட்டம் நடத்தும்போது, தவறிப்போய் கூட அழாமல் இருக்க முயற்சிப்பேன். மனதில் துக்கம் அலைமோதி பரபரப்பாகி விடும். ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டம் நடந்தபோது சா கந்தசாமி மேடையில் விம்மி விட்டார். நான் விம்ம முடியாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அசோகமித்திரனுக்கும் நான் இரங்கல் கூட்டம் நடத்த விரும்புகிறேன். அடுத்த வாரத்தில் ஒருநாள். முக்கால் வாசி வெள்ளிக்கிழமை. ஆனால் இன்னும் இடம் பார்க்கவில்லை. இதுமாதிரியான கூட்டத்தை நடத்த நான் விளக்கில் பயன்படுத்தும் திரிபோல்தான் செயல்படுவேன். அதுமாதிரியான கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்தக் கூடியவர்கள். எழுத்தாள நண்பர்கள், வாசகர்கள்.
அசோகமித்திரனுக்கு ஏகப்பட்ட எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இக் கூட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
சென்னையில் எளிதாக எல்லோரும் வந்து போகிற மாதிரி ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இக் கூட்டத்திற்கு 100 பேர்களுக்குமேல் கட்டாயம் வருவார்கள் என்று நம்புகிறேன். இதைப் படிக்கும் யாராவது ஒருவர் ஒரு நல்ல இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
Comments