Skip to main content

Posts

Showing posts from May, 2016

வைதீஸ்வரனின் 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,'

அழகியசிங்கர் எண்பது வயதாகிற வைதீஸ்வரனின் கவிதைத் தொகுதியின் ெயர். அதற்குமட்டும் ஒரு ஆகாயம்  80 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.  எழுத்து காலத்திலிருந்து எழுதி வருபவர் வைதீஸ்வரன்.  ஒரு விதத்தில் எழுத்து என்பது தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் எழுத முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.  மூத்தத் தலைமுறை சேர்ந்த எழுத்தாளர் என்கிறபோது, வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் முதலிய கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறார்கள்.  இன்று எழுதப்படுகிற கவிதைகள் எப்படிப்பட்ட கவிதைகள்.  இக் கவிதைகளிலிருந்து வைதீஸ்வரன் எப்படி தெரிய வருகிறார் என்ற கேள்வி நம் முன் இருக்கத்தான் இருக்கிறது.  இன்றைய கவிதை பொது தளத்திற்கு வந்து விட்டது.  நவீன விருட்சத்தில் கவிதை பிரசுரமாவதை விட ஆனந்தவிகடனில் கவிதை வருவதை பெருமிதமாக கருதுகிற கவிஞர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.   மேலும் கவிதை என்பது ஒரு ஜோக் மாதிரி ஆகிவிட்டது.  ஜோக்கை பிரசுரம் செய்கிற மாதிரிதான் கவிதைகளையும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன.  அதனால் கவிதைக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதை கிடைக்காமல் போகிறது. ஒரு கவிதைத் தொகு

ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல்

அழகியசிங்கர் டிசம்பர் வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் என் வீடும் ஒன்று. கீழ் அறையில் வைத்திருந்த எத்தனையோ புத்தகங்கள் பாழாகி விட்டன. முதலில் நேர்பக்கம் என்ற பெயரில் நான் கொண்டு வந்த கட்டுரைப் புத்தகங்கள் எல்லாம் நாசமாகி விட்டன. அந்தப் புத்தகத்தை இப்போதும் விற்பனைக்காக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கொண்டு வர உள்ளேன். ஆனால் பாதி விலையில். அதேபோல் என்னுடைய கதைப் புத்தகமான ரோஜாநிறச் சட்டை வீணாகிவிட்டது. அப்புத்தகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலர்ந்த நிலையில் விற்பனை செய்ய உள்ளேன். ரூ 100 விலை உள்ள அப் புத்தகத்தை ரூ 20 க்கு விற்க உள்ளேன். அதேபோல் வினோதமான பறவை என்ற என் கவிதைப் புத்தகத்தை ரூ.10 க்கு விற்க உள்ளேன். எல்லாப் புத்தகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தப்பித்தப் புத்தகங்கள். டிசம்பர் மாதம் ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல். 927 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.820. இந் நாவலின் சில பிரதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து விட்டன. ஆனால் பெரும்பாலான பிரதிகள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப் புத்தகத்தை விலை குறைவு

ஏழு வரிக் கதை

1. தண்ணீர் அழகியசிங்கர  அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.  உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவருடைய வயது 94.  எழுந்திருக்க முடியவில்லை.  படுத்தப் படுக்கையாக இருந்தார். அவருடைய பையன் கணினியில் ஒரு ஏழுவரிக் கதை டைப் அடித்துக்கொண்டிருந்தான்.  அதன் தலைபபு தண்ணீர்.  அவனுடைய மனைவி டிவியில் ஆழ்ந்திருந்தால.  டிவியையாவது அசைத்து விடலாம். அவளை அசைக்க முடியாது.  சமையல் அறையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.  டொக் டொக் என்று சப்தம்.  பெரியவர் சத்தமாக பையனைக் கூப்பிட்டார்.  பையன் அவர் அறைக்குச் சென்றான்.  அவர் சொன்னார் :  'தண்ணீ....தண்ணீ...'  பையன் ஒரு டம்பளரில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னான்.  பெரியவர் விடாமல், 'தண்ணீ..தண்ணீ' என்றார்.  அவனுக்குப் புரியவில்லை.  அவன் மனைவி டிவியில் முக்கியமான கட்டத்தில் மூழ்கி இருந்தாள்.  சமையல் அறை குழாயிலிருந்து டொக் டொக்..... 2.  ரோஜாப்பூ வாசனை  தெருவில் அந்தப் பெண் நடந்து கொண்டிருந்தாள்.  கையில் ஒரு பிளாஸ்டிக் பேக்.  தலை

பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ்

அழகியசிங்கர்  தீயுறைத் தூக்கம் என்ற கவிதைத் தொகுதிக்குப் பிறகு நான் கொண்டு வந்துள்ள இன்னொரு கவிதைத் தொகுதி அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் தொகுப்பு. பெருந்தேவி வித்தியாசமான பெண் கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.  பெருந்தேவி கவிதையின் முக்கியமான சாரம் என்று நான் கருதுவது, அவருடைய நவீன போக்குக்கொண்ட உள்அழகுக் கொண்ட கவிதைகள். கவிதையிலிருந்து பெரும்பாலோர் உரைநடை வடிவத்திற்கு மாறி விட்டார்கள். க நா சு உருவாக்கிய உரைநடைக் கவிதைகள்தான் எழுதுகிற சாத்தியமாய் இருக்கிற சூழ்நிலையில் பெருந்தேவி கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எழுதிச் செல்கிறார். இவருடைய முதல் தொகுதியான தீயுறைத் தூக்கம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளின் சாயல் இந்தத் தொகுதியிலும் உண்டு.   ஒவ்வொரு முறையும் கவிதையை எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இத் தொகுப்பைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.   இன்று மதியம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசும்போது, கவ

ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகம்

அழகியசிங்கர்   ஆரம்பத்தில் நான் சுவாமி விவேகானந்தர் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.   The Complete works of Swami Vivekananda  Part 1   என்ற புத்தகத்தை நான் ஆர்யகவுடர் ரோடில் உள்ள ரேஷன் கடை க்யூவில் நின்றுகொண்டு படித்ததாக நினைப்பு.  இது எப்பவோ நடந்த சம்பவம்.  எனக்கு விவேகானந்தர் புத்தகம் வீரமாக இருப்பதற்கு தைரியத்தைக் கொடுப்பதாக நினைப்பேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  வீரமாக இருப்பதற்கு பெரிய போராட்டம் எல்லாம் இல்லை.  மெதுவாக விவேகானந்தர் என்னிடமிருந்து உதிர்ந்து போய் விட்டார்.  அவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்கள் சொல்வதன் மூலம் கேட்டிருக்கிறேன். அவர் இறந்து போனபோது அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கேள்விப்பட்ட செய்தி என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. கம்பீரமான அவருடைய புகைப்படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவருக்கு காமெரா மூளை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஒரு தடியான புத்தகத்தை அவர் வெறுமனே  சில நிமிடங்களில் புரட்டிப் பார்த்தே உள் வாங்கிக் கொள்வார் என்று  சொல்வார்கள்.  அந்தப் புத்தகத்திலிருந்து யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் என்று சொ

என் புத்தக ஸ்டால் எண் 594

அழகியசிங்கர் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ஸ்டாலைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  எபபோதும் எதிலும் நான் முதலும் இல்லை கடைசியிலும் இல்லை. எங்குப் போனாலும் அப்படித்தான் வாய்க்கும்.   எல்லாம் நடுவில்தான் கிடைக்கும்.  பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலே நான் முதல் பெஞ்சிலோ கடைசிப் பெஞ்சிலோ உட்காரமாட்டேன்.  அதேபோல் இதுவரை புத்தகக் காட்சியில முதல் ஸ்டாலோ கடைசி ஸ்டாலோ வந்தது கிடையாது.  ஆனால் இந்த முறை 594 என்ற கடைசி ஸ்டால் கிடைத்துள்ளது.  என்ன செய்வது? என்ன வரிசை என்பது தெரியவில்லை.  ஐந்தாவது வரிசையா முதல் வரிசையா என்பது தெரியவில்லை.  ஆனால் அந்த வரிசையில் நடக்க ஆரம்பிப்பவர் பாதிதூரம் நடந்தவுடன்,  ரொம்ப ரொம்ப களைத்துப் போய்விடுவார்கள்.  கடைசி ஸ்டாலை ஏன் பார்க்க வேண்டும் அப்படியே போய்விடலாம் என்று போய் விடுவார்கள்.   அதனால் நான் புத்தகங்களை மிகக் குறைவான பிரதிகளே எடுத்துக்கொண்டு வர உத்தேசித்துள்ளேன்.  இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு ஐந்து புத்தகங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்.  நூறாவது இதழான விருட்சம் இபபோது கொண்டு வர முடியாது.  புத்தகக

அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது?

அழகியசிங்கர் சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன்.  அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.  அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டவர், ஒரு அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியைக் கூறினார்.  நான் இப்போதெல்லாம் படிப்பதில்லை என்பதுதான் அது. ஒரு காலத்தில் அவர் வார் அன்ட் பீஸ் என்ற டால்டாய் நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தவர். 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள டால்ஸ்டாய் நாவலை மூன்று நாட்களில் படிததவர் என்ற தகவல் எனக்கு அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.  ஏன் என்றால் என்னால் அதுமாதிரி படிக்க முடியாது.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் கவனித்தேன்.  அந்தப் புத்தகத்தை 3 நாட்களில் படித்தேன் என்று பெருமையுடன் சொன்னாரே தவிர, அது எப்படிப்பட்ட புத்தகம் என்பதை சொல்லவில்லை.  அவர் சொன்னதில் எதுவும் புத்தகம் பற்றிய தகவல் இல்லை.  அந்த மொத்தப் புத்தகத்தையும் 3 நாட்களில்  படித்தேன் என்பதைத் தவிர வேற ஒன்றுமில்லை. மேலும் அவர் அப் புத்தகத்தை 3 நாட்களில் முடித்தார் என்ற தகவலால், நான் அப் புத்தகத்தை வைத்திருந்தும் ஒரு பக்கம் கூட ப

ராமலக்ஷ்மி

சாதீயம் ஒ வ்வொரு வேட்டைக்குப் பிறகும்  விருந்துகள் நிகழ்கின்றன.  வேலி தாண்டி வந்து விட்டதாக  அறைந்து இழுத்து செல்லப்பட்ட  வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த  மிருதுவான கண்களின் சுவையை  வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன  வேங்கைப் புலிகள்.  கானகமாகிக் கொண்டிருக்கிறது  மானுடர் உலகம். 

அவனுக்கு வேற வழி இல்லை.

அவனுக்கு வேற வழி இல்லை.  அழகியசிங்கர்  அப்பா அவர் அறையை விட்டு இன்னொரு அறைக்குச் சென்று போய்ப் படுத்துக்கொள்ள ஆரம்பித்தார்.  அவருக்கு நடப்பது கஷ்டமாகி விட்டது.  எப்போதும் இருந்த அறையில் அவருடைய எளிமையான படுக்கை இருக்கும்.  பக்கத்தில் ஹோமியோபதி மருந்துகள் இருக்கும்.  செலவு கணக்கு எழுத ஒரு நோட் புத்தகம் இருக்கும்.  ஒரு விபூதி டப்பா இருக்கும்.  ஒரு சின்ன கண்ணாடி இருக்கும்.  அப்பா அடிக்கடி அந்தக் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்துக் கொள்வார்.  கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவர் சரியில்லை.  நடக்க முடியவில்லை. தூங்கி தூங்கி விழுந்தார்.  சாப்பாடு ரொம்ப குறைவாகப் போய் விட்டது.  அவர் அறையில் புத்தகக் குவியலும், ஒரு கம்ப்யூட்டரும் இருக்கும்.   எப்போதும் அவருடைய பெரிய பையன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு டைப் அடித்துக் கொண்டிருப்பான்.  அப்பாவிற்கு வெறுப்பாக இருக்கும். "என் இடம்தான் பேரு..நீதான் முழுக்க முழுக்க உன் புத்தகங்களையும் கம்ப்யூட்டரையும் வைத்துக் கொண்டிருக்கிறாய்.." என்று பெரிய பையனைப் பார்த்து  முணுமுணுப்பார்.  அவர் பேரன் தங்கும் அறைக்குச் சென்று வி

"ஏழுவரி"க் கதைகள்

மூலம்   ஸிந்துஜா   இ ன்று காலை அது நடந்தது . நான் தினமும் பார்க்குக் போய் வாக்கிங் என்று சுற்றிச் சுற்றி வருவேன் . அந்தப் பையனும்   கனத்த தோல் வார்ப் பட்டியால் கட்டப் பட்ட நாயைக் கூட்டிக் கொண்டு வருவான் . நான் அவனுக்கு எதிரே வரும்போது   அவன் நாயிடம் ஆங்கிலத்தில் உத்தரவுகளை இடுவான் . ஆங்கிலத்தில் மட்டும்தான் . அவன் ஆங்கிலம் குறுகத் தரித்த குறள் . கோ , கம் , சிட் , டோன்ட் , ஸ்டாப் , ஈட் , நான்சன்ஸ் , ஜம்ப் , ரன் , ஷிட் , டாமிட்  .... என்று  .   ஓரக் கண்ணால் நான் கவனிக்கிறேனா என்று பார்த்துக் கொள்வான் .  ஒரு நாள்   யாரோ " சிவனாண்டி " என்று கூப்பிட்டார்கள் . அவன் திரும்பிப் பார்த்துக் கூப்பிட்டவரைப் பார்த்து " வணக்கமண்ணே . நல்லா இருக்கீங்களா " என்று கேட்டான் . நான் அவர்களைக் கடந்து சென்றேன் . அவரும் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார் . அவன் வழக்கம் போல நாயிடம் " கோ , கோ " என்று சங்கிலியை இறுக்கினான் . இன்று அது நடந்தது . நான் அவனைக் கட