அழகியசிங்கர்
ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன். நான் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை எழுதி அனுப்பி உள்ளார். நீங்களும் முடிந்தால் எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் அனுபபலாம். navina.virutcham@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். எல்லாவற்றையும் ஒரு புத்தகமாக பதிவு செய்ய உத்தேசம். இதோ அசோகமித்திரனின் கதைகள்.
1. ஒரூ காகம்
வழக்கம் போல, டெய்லி தவறாமல் வந்து உட்டான்ஸ் எல்லாம் உடர சீனு அன்னிக்கும் நல்ல பார்ம்ல.. சுனாமி வரும்னு மிருகங்கள் பறவைகள் இதுக்கெல்லாம் முன்னமே தெரிஞ்சிடுமாம். யார் கிட்ட கதை உடராங்க.. எனக்கு சுத்தமா இந்தமாதிரி மூட நம்பிக்கைஎல்லாம் கிடையாது. அப்போது ஒரு காக்காய் அவர் தலை மீது இடித்தும் இல்லாமலும் சென்றது. பக்கத்தில் ஜாக்கிங்கில் இருந்த ஒரு மாமி சொன்னாள்- காக்காய் தலைல தொட்டுதுன்னா சனீஸ்வரன் இல்லன்னா பிரம்மஹத்தி பிடிக்குமாம், ஜாக்கிரதை . அடுத்த நாள் சீனுவைக் காணும் - சனிக் கிழைமை.. எங்கு சென்றாரோ
2. ட்ரா ஜி்க் கதை
நடேசன் பூங்கா கதை கேட்போர் எல்லோரும் சென்று அரைமணிக்கும் மேல் ஆகி விட்டது. ஒருவர் மட்டும் சோகம் கவ்விய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் சென்று கேட்டேன் : நான் படித்த ட்ரா ஜி்க் கதை நன்றாக இருந்ததா. அவர் சொன்னார்: இன்னொரு கதையும் படித்திருந்தீர்களானால், என்னுடைய கைமுறுக்கு அத்தனையும் விற்றுப்போயிருக்கும்
3. ஜயராமனும் லட்சுமியும்
கூட 25 லட்சம் கொடுத்து ரோட் பக்கம் இல்லாமல் பின்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்ரிஹப்ரவேசம். தடபுடல். பதினாலாவது மாடி ப்ளாட்ல இருந்த பெரிய சிடவுட்ல ஷாமியானா போட்டு, ரோட்ல போறவங்க வரவங்க எல்லாம் வாசல்ல நின்ன காரை எல்லாம் பார்த்து விட்டு யாரோ சினிமா காரங்க வந்திருக்காங்க போலன்னு போனாங்க.இப்ப சமுத்ரம் தான் பார்த்துக் கொண்டு இருக்கு தினமும் ஜெயராமன் லட்சுமி குடுமி பிடி சண்டையை ...
Comments