அழகியசிங்கர்
வாரம் ஒரு முறை சந்தித்து கதையோ கவிதையோ படிப்பது என்பதும் கேட்பது என்பதும் யோசித்தால் சற்று சிரமமான விஷயமாகக் கூட தோன்றலாம். அதனால்தான் எல்லோரும் நடமாடும் பூங்காவில் இக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு 2 பேர்கள் போதும். பூங்கா ஒரு அற்புதமான விஷயம். எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். கலகலவென்று இருக்கும். நாம் ஒரு இடத்தில் கூடி கதையையோ கவிதையையோ படிக்கலாம். இதை அவரவர் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில உள்ள பூங்காவிலும் வைத்துக் கொள்ளலாம். கட்டாயம் வீட்டில் வேண்டாம். அது வீட்டில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும்.
1. கூட்டத்திற்கு வருபவர்கள் ஒரு கதையோ கவிதையோ வாசிக்கலாம்; யாரும் படிக்க இல்லையென்றால் இன்னும் கதைகளோ கவிதைகளோ வாசிக்கலாம்.
2. கூட்டம் சரியாக 5.00 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் முடித்து விடலாம்;
3. கூட்டத்திற்கு வருபவர்கள் முதல் முறையாக அவர்கள் எழுதிய கதையோ கவிதையோ வாசிப்பதாக இருந்தால் முதலில் அதை வாசிக்கவும்.
4. நீங்கள் விருப்பப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும வாசிக்கலாம்.
5. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.கதையைப் படிப்பதற்குப் பதில் கதையைச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்று. ஆனால் எழுத்தில் எழுதப்படுகிற நயத்தை படித்தால்தான் வெளிப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
6. தயபுசெய்து தி நகர் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எளிதில் தி நகரிலிருந்து ஒருவர் வீட்டுக்குப் போகும் தூரத்தில் இருக்கும்படி வரவும்.
7. படிக்க விரும்புவர்கள் அவரவர் புத்தகமோ பத்திரிகையோ எடுத்து வந்து வாசிக்கவும்.
நடேசன் பூங்காவில் வருகிற ஞாயிறு அதாவது 10 ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது. 5.00 மணிக்கு வரவும். பூங்கா முகப்பில் தென்படும் மேடைக்கு வரவும். அங்கு அமர்ந்துகொண்டு வாசிக்கலாம்.

Comments