Skip to main content

நரியும் நிலாவும்



பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.

Comments

கவிதை அருமையாயிருக்கு..
/நிலாவின் சுவையைபுளிக்குமென்று சொல்லுமா./

சொல்லாது என்றுதான் எண்ணுகிறேன்:)! அழகான கவிதை. தொடரட்டும் உங்கள் நிலாக் கவிதைகள்.
மதி said…
a titillating poem.. nice