Skip to main content

சில்லறை

கடிகார முள்

எதை துரத்துகிறது

உச்சி வெயில்

சாலை வெறிச்சோடியது

வானில் ஒரு பட்டம்

நிலவு காய்ந்தது

என்னன்னமோ யோசனைகள்

விடிந்துவிட்டது

பைகளைத் துழாவினேன்

சில்லறை இல்லை

என் அதிர்ஷ்டம்

வீட்டுக்குத் திரும்பினேன்

கதவு பூட்டப்பட்டிருந்தது

நேற்று திறந்திருந்ததே

குடை விரிக்க

யோசிக்கிறேன்

நனைந்தால் ஒன்றும்

கரைந்துவிட மாட்டேன்

இன்று கடிதம்

வரவில்லை

என்று தான் வந்தது

நாய் துரத்தியது

தப்பினால் போதுமென்று

ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன்

நாய்கள் ஜாக்கிரதை என்ற

போர்டை கவனிக்காமல்.

Comments

சில்லறை சில்லறையாக எத்தனை சிரமங்கள்!!
சில்லரையாகவும் சிரமங்கள்... பணமாகவும் பிரம்மாண்ட சிரமங்கள்

Popular posts from this blog