Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........45

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நவீன விருட்சத்தின் 90வது இதழை எடுத்துக்கொண்டு வந்தேன். எப்படியோ வந்து விட்டது. இந்த இதழைக் கொண்டுவர ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. முனைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதுபவர்கள் படிப்பவர்கள் என்ற இரு பிரிவுகளை எடுத்துக்கொண்டால், இரண்டுமே குறைவு என்று ஆரம்பம் முதல்
சொல்லிக்கொண்டிருப்பவன் நான்.

அச்சடித்த இதழைப் பிரித்துப் பார்க்கவே எனக்கு சற்று அச்சமாக இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே இதழில் அச்சுப் பிழைகள் தாராளமாக இருந்தன. இந்த முறையும் புத்தக விமர்சனம் செய்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

மின்சாரம் இல்லை என்பதால் இதழை ரொம்பவும் தாமதப் படுத்தி விட்டார்கள். நான் இதோ 12ஆம் தேதி Florida என்ற அமெரிக்காவில் உள்ள ஊருக்குப் போக உள்ளேன். என் புதல்வன் அங்கிருக்கிறார். 1 மாதம் அங்கிருப்பேன். அதற்குள் இதழை எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

இந்த இதழ் அட்டைப் படத்தில் பூனையைக் கொண்டு வந்ததால், என் வீட்டில் பூனைக் குட்டிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் 90வது இதழில் இடம் பெற்றுள்ளன.

1. இலக்கியத் தரம் உயர - க.நா.சு
2. உப்பு - லாவண்யா
3. புத்தக விமர்சனம் - ஐராவதம்
4. அழகிய வீரர்கள் - கவிதை - ராமலட்சுமி
5. பழம் புத்தகக் கடை - விட்டல் ராவ்
6. அவலம் - சிறுகதை - உஷா தீபன்
7. குவளைகளில் கொதிக்கும் - கவிதை - மிருணா
8. மிகை - சிறுகதை - எஸ். ஷங்கரநாராயணன்
9. ஜோல்னா பைகள் - கவிதை - அழகியசிங்கர்
10. வெளியே ஒருவன் - சிறுகதை - நா.ஜெயராமன்
11. இரண்டு கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
12. இரண்டு கவிதைகள் - ராஜேஷ் நடராஜன்
13. பால்ய பொழுதுகள் - கவிதை - ப மதியழகன்
14. இரண்டு கடிதங்கள் - சிறுகதை - அழகியசிங்கர்
15. அகாலம் - சிறுகதை - பஞ்சாட்சரம் செல்வராஜன்
16. அவனின் தேடல் - கவிதை - குமரி எஸ் நீலகண்டன்
17. முகங்கள் - கவிதை - ஐராவதம்
18. சாய்பாபா - கட்டுரை - அம்ஷன்குமார்
19. அனுமானங்கள் - கவிதை - அனுஜன்யா
20. நிசி - கவிதை - ப மதியழகன்
21. உரையாடல் - அழகியசிங்கர்

பத்திரிகை அனுப்புவதில் விட்டுப் போயிருந்தால், New Booklandsல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்துக்கொள்ளவும். கூடிய விரைவில் அடுத்த இதழ் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

Comments

இனி அமெரிக்கப் பயண அனுபவத்தை அடுத்து பார்க்கலாம். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...
90 வது இதழில் அழகிய வீரர்களும். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
தடைகளைத் தாண்டி வெளியிட்டமைக்கு நன்றிகள்