Skip to main content

ஒரு கவிதை

                                                                                                             
என்ன இங்கு
காக்காயைக் காண முடியவில்லை?

என்ன இங்கு
அணில்கள் குண்டோ தரனாகத்
தெரிகின்றன..

எறும்பே எறும்பே
எங்கே போனீர்கள் நீங்கள்

தலைதெறிக்க கார்கள்
எங்கே ஓடுகின்றன

மரங்கள் என்ன
இப்படி ஓங்கி வளர்ந்திருக்கின்றன

அசையாமல் வீடுகள்
எல்லாவற்றையும் சொல்லி சொல்லி சிரிக்கின்றன

Comments

அங்கே அணில்கள் மிகப் பெரிதாகவே இருக்கும்.
அசையாத வீடுகளின் அங்கதம் அமெரிக்காவைச் சொல்கிறது. நன்றிகள்.. சனி... ஞாயிறு அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்திருப்பீர்கள். இனி வெள்ளிக் கிழமை வரை நிறையக் கவிதைகள் எதிர்பார்க்கலாம். பார்த்தவற்றை அசை போட்டு உங்களிடமிருந்தும் நிறைய கவிதைகளை எதிர்பார்க்கலாம்.