Skip to main content

கவிதையை முன்வைத்து

நர்சரி படிக்கும் மகன்

இன்று விளையாட தேர்ந்து கொண்டது

நான் வாசிக்க வைத்திருந்த

கவிதைப் புத்தகங்களில் ஒன்றை.


தொலைதூர பயணமொன்றில்

டேப் ரெகார்டரில் ஒலித்த

பாடலின் வரிகள்

எங்கோ படித்த கவிதை வரிகளின்

இன்னொரு வடிவம்.

முதல் முதல் பார்த்த

தோழியின் கணவரிடம்
சகஜமாக உரையாட முடிந்தது
என் முதல் கவிதைத் தொகுதியை

முன்வைத்து.

மகன் பிறந்த நாள்

கொண்டாண்டத்தின் இடையில்

நண்பனின் மனைவி ஒருவர்

நான் எழுதிய கவிதை ஒன்றை

வரி மாறாமல் சொல்லி

வாழ்த்தியது பாராட்டு முகமாய்.

நிகழ் கணங்கள் யாவிலும்
நிறைந்து நடை பயிலும்
கவிதையின்

கால்தடங்கள்

வேறு ஒன்றும்...


இன்னொரு முறை
பத்திரமாய்
தரையிறக்கித்
தரப்பட்டிருக்கிறது
இந்த வாழ்வு
என்பதைத் தவிரவேறு ஒன்றும்
விசேசமாய்
சொல்வதற்க்கில்லை
இந்த இன்னொரு
விமானப் பயணம்.

சிறகடித்து...

காரின் முன்புறம் அமர்ந்தபடி
காலையில் கண்ட வெண்புறா

திறந்த கதவுச் சத்தத்தில்
தாவிப்போய் தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட இடமொன்றை.

அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்

இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா

இடம் மாறி இருக்குமா - அந்த
இன்னொரு கார் கிளம்பும் ஓசையிலும்.

Comments

அருமை. வேறு ஒன்றும் கவிதை எனக்கு பிடித்த ஒன்று
Unknown said…
நன்றி விநாயக முருகன்.