Skip to main content

உச்சத்தின் அருகில்



முன்னூறு கண்கள்
உற்றுப் பார்த்தாலும்
சட்டை செய்யாத இயந்திரம்
பத்தாயிரம் அடி உயரத்தில்
மிதக்கிறது முன்னும் பின்னும்
அலட்சியப் புன்னகையுடன் ;
குதிகாலில் குறுக்கிட்ட
குழந்தையின் பார்பியால்
தடுமாறி விழுபவளைத்
தாங்கிப் பிடிப்பவன்
கண்களிலிருந்தும்
அதரங்களிளிருந்தும்
சில பூக்கள் அவளைச்
சூழ்ந்த நேரத்தில்
மீண்டும் பெண்ணானவளின்
கன்னச் சிவப்பிற்கு
அவள் செலவழித்த கணங்கள்
புரிகிறது பலருக்கு இப்போது ;
வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த
கவிதை ஒருவனுக்கு ;
கேட்கும் ராகத்தின்
புது இழை ஒருத்திக்கு ;
எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்.

Comments

அழகியக் கவிதை!

வாழ்த்துக்கள் அனுஜன்யா
ஆ உச்சம் உச்சம் அருமை.
அருமையாக வந்துள்ளது. வாழ்த்துக்கள் அனுஜன்யா