Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87



அழகியசிங்கர்  



ப கங்கைகொண்டான்

பழைய சுசீலாக்கள்


பத்தாவது பாரம் படித்தோம்
பாவை சுசீலாவும் நானும்
ஆசிரியர் வெளியே போனால்
மானிட்டர் என்னை நோக்கி
ஒன்றுக்குப் போக வேண்டி
ஒரு விரல் காட்டி நிற்பாள்
ஆள் பார்க்க இல்லாவிட்டால்
அக்கம் பக்கம் நோக்கி விட்டு
ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள்
அரைக்கால் டிராயர் துறந்து
முழுக்கால் மாட்ட வைத் தாள்
ஒரு நாள் ஒரே மாதிரி
சொல்லி வைத்தாற் போலச்
சாக்கு நிறக் காக்கிப் பையில்
புத்தகங்கள் தூக்கி வந்தோம்
பையன் கள் மாற்றி வைத்தார்
பைமாற்றிப் போனாள் அந்நாள்
கைமாறிப் போனாள் மறு நாள் ........

நன்றி : கூட்டுப் புழுக்கள் - கவிதைகள் - ப கங்கைகொண்டான் - வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் - பொத்தனூர் அஞ்சல் - சேலம் 638 181 - ஆண்டு : 1974 - விலை : ரூ.10

Comments