அழகியசிங்கர்
1. 106வது இதழ் விருட்சம் என்ன ஆயிற்று?
இந்த மாதத்திற்குள் வந்து விடும்.
2. நீங்கள் விருட்சம் ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன
ஆமாம். இதழ் வந்தவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ண நினைக்கிறேன். ரைட்டர்ஸ் கேப்பில் எனக்குப்பிடித்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேச.
3. சிறுபத்திரிகை என்பதே தேவையில்லை என்ற கருத்திற்கு என்ன சொல்கிறீர்கள்?
தமிழ் இந்துவில் அப்படி ஒரு கருத்து ஏற்படுகிற மாதிரி ஒரு தலையங்கம் வந்தது. திரும்பவும் படிக்கலாமென்றால் அந்தப் பத்திரிகை கண்ணில் படவில்லை. அந்தக் கருத்து சரியில்லை. எக்ஸ்பிரஷன்தான் சிறுபத்திரிகை. அதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். வாசகர் கையில்தான் ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதெல்லாம் இருக்கிறது. சிற்றேடு மாதிரி ஒரு இதழை தமிழவன் மட்டும்தான் கொண்டு வர முடியும். அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.
4. ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அது மாதிரியான ஒரு சம்பவத்தை நினைத்து வருத்தமாக இருந்தது. திகில் கதை எழுதும் ராஜேஷ்குமார் கூட இதுமாதிரியான நிஜ சம்பவத்தைக் கற்பனை செய்து எழுத முடியாது என்று தோன்றுகிறது.
5. சமீபத்தில் தபாலில் வந்த ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல முடியுமா?
எனக்கு சமீபத்தில் தபாலில் வந்த புத்தகங்களைப் பற்றி கூற விரும்புகிறேன். முதல் புத்தகம். üநூலகத்தால் உயர்ந்தேன்ý என்று ஆலந்தூர் கோ மோகனரங்கன் எழுதிய புத்தகம். இது ஒரு புதையல் மாதரி எனக்குத் தோன்றுகிறது. 1096 பக்கங்கள் கொண்ட புத்தகம். பல சம்பவங்களைக் கொண்ட புத்தகம் இது. இன்னொன்று மணல் வீடு என்ற பத்திரிகை. 34-35 கொண்ட மணல்வீடு பத்திரிகையைப் பார்த்து அசந்துவிட்டேன். 232 பக்கங்கள் கொண்ட இதழ். நம்ப முடியவில்லை பெரு. விஷ்ணுகுமார் அவர்களின் ழ என்ற பாதையில் நடப்பவன் என்ற கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைப் புத்தகத்தை உடனே படிக்க வேண்டும். படித்துவிட்டு எழுத வேண்டும்.
6. சமீபத்தில் பார்த்தத் தமிழ்ப் படம்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்ப் படம் ஏன்டா பார்க்கப் போனோம் என்று என்னைக் கலங்க வைத்து விட்டது. இனிமேல் நல்ல திரைப்படங்கள் தமிழில் வராதா என்ற ஏக்கம் கூட ஏற்பட்டு விட்டது.
7. எதுவும் நம் கையில் இல்லை என்பதை நம்புகிறீர்களா?
எதுவும் நம் கையில் இல்லை. கேரளாவில் வெள்ளம் வந்து அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. நம் கையில் இல்லை.
8. உங்கள் புத்தக லைப்ரரிக்கு வந்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் சிறு பத்திரிகைகளை யாரோ கொள்ளை அடித்துக்கொண்டு போவது போல் கனவு கண்டேன்.
மோசமான கனவு
9. கோட்பாடு ரீதியாக விமர்சிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
கோட்பாடு ரீதியாக எழுதப்படுகிறவற்றைப் பற்றி படித்துப் பார்க்கிறேன். ஒரே குழப்பமாக குழப்புவதுபோல் தோன்றுகிறது.
10. பிரமிள் புத்தகத் தொகுப்புப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அத்தனையும் வாங்கி வைத்துவிடலாம். ஆனால் படிக்க வேண்டுமே?
11. உங்களின் மனதுக்குப் பிடித்த கவிதைத் தொகுதி எப்போது வரப்போகிறது?
கூடிய சீக்கிரம். முதலில் 100 கவிதைகள்.
12. சமீபத்தில் நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களைப் பற்றி கூறுங்கள்.
இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். ஒன்று நீங்களும் படிக்கலாம் தொகுதி 2. இன்னொரு புத்தகம். சத்யஜித்ரேயின் அபுர் சன்ஸôர் திரைக்கதையை மொழிப்பெயர்த்தப் புத்தகம். எளிதாகப் படித்துவிடும்படி எல்லாப் புத்தகங்களும் 100 பக்கங்களுக்குள் அடங்கி விடும்.
13. எதற்காக நீங்களும் படிக்கலாம் புத்தகம் கொண்டு வந்துள்ளீர்கள்.
நான் படிக்கிற புத்தகங்களை படித்து முடித்தவுடன் சில நாட்களில் மறந்து விடுகிறேன். அப்படி மறக்காமல் இருக்கத்தான் ஞாபகப்படுத்தும் விதமாக நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன்.
14. வாழ்க்கை எளிதாக இருக்கிறதா?
இல்லை.
15. நீங்கள் ஆத்திகரா நாத்திகரா
ஆத்திகன். அசோக் நகரில் உள்ள ஹனுமார் கோயிலில் பொங்கல் சாப்பிடுவதை விரும்புவேன்.
16. உங்களுக்குக் கூட்டத்தில் பேசுவதற்கு எளிதாக வந்து விட்டதா?
எளிதாக வந்து விட்டது.
17. இந்த மாதம் யார் பேசுகிறார்கள்
சத்யானந்தன்.
18. எதைப் பற்றி பேசுகிறார்?
சினிமா தொலைக்காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்
19. இத்துடன் போதுமா?
போதும்.
Comments