அழகியசிங்கர்
என் லைப்ரரியில் சில நேரம் புத்தகம் படித்துவிட்டு ஆர்யாகவுடர் ரோடில் உள்ள மாம்பலம்ஸ் வெங்கடேஸ்வரா போளி நிலையத்திற்கு வருவேன். ஒரு நாள் போன்டா, ஒருநாள் மசால் வடை, ஒருநாள் உருளைக் கிழங்கு போன்டா, ஒரு நாள் மெதுவடை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன். அங்கு என் மனைவி தயாராக வைத்திருக்கும் கேழ்வரகுக் கஞ்சியுடன் சேர்த்து உண்பேன். போளி ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுவது நல்லதா கெட்டதா தெரியாது. என் நண்பர் டாக்டர் பாஸ்கரன்தான் சொல்ல வேண்டும். அந்தப் போளி நிலையத்தின் வாசலில் ஒரு மரம். அதை கோயிலாக யாரோ மாற்றி உள்ளார்கள். விளக்கு வைக்கிறமாதிரி ஒரு மரப்பொந்தை உருவாக்கி உள்ளார்கள். மரத்தைச் சுற்றி புடவைக் கட்டி மஞ்சள் குங்குமம் பூசி உருவாக்கி உள்ளார்கள். போளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த மரத்தின் மகத்துவம் தெரியவில்லை. அப்படியா என்று கேட்கிறார்கள்.
Comments