அழகியசிங்கர்
போனவாரம் சனிக்கிழமை மூன்றாம் தேதி நவீன விருட்சம் 102 வது இதழ் வெளியிட ஒரு சிறிய மிகச் சிறிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். இடம் போஸ்டல் காலனி முதல் தெரு. வந்திருந்தவர்களை போனில் கூப்பிட்டேன். பெரும்பாலோர் 102வது இதழில் எழுதியவர்கள். அவர்களை நான் அறிமுகப்படுத்தினேன். வ வே சு நவீன விருட்சம் இதழை எல்லோருக்கும் வழங்கினார்.
ஒவ்வொருவராகப் பேசப் பேச கூட்டம் வேற திசையில் போய்விட்டது. ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது. பாரதியார் கவிதைக்கு உரை அவசியம் என்ற வ வே சு கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். வந்திருந்த இன்னும் பலர் மௌனமாகவே இருந்தார்கள்.
என்னுடைய அடுத்த வேலை நவீன விருட்சம் இதழை எல்லோருக்கும் அனுப்புவது. உண்மையில் கடினமான வேலை அதுதான். அங்கு எடுத்தப் புகைப்படத்தை இங்கே தருகிறேன்.
Comments