Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள்


பத்து கேள்விகள் பத்து பதில்கள்

அழகியசிங்கர்


நண்பர்களே,

வணக்கம்.

சமீபத்தில் நான் தில்லி சென்றிருந்தேன்.  நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை பி ஏ கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்ல்.  வழக்கம்போல் அவரைப் பேட்டி எடுத்தேன்.  பத்து கேள்விகள் பத்து பதில்கள் தலைப்பில் அவருடைய இந்தப் பேட்டி வெளி ஆகிறது.  மிகக் குறைவான பேர்களே இதைப் பார்த்து ரசித்தாலும் இந்த முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.  இப்பேட்டி நடுவில் வெங்கட்ராமனும் கிருஷ்ணனிடம் சில கேள்விகள் கேட்டிருப்பார்.  

பி ஏ கிருஷ்ணன் இது வரை 5 புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் கொண்டு வந்துள்ளார்.  அவருடைய புகழ்பெற்ற நாவல் புலி நகக் கொன்றை. முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளிவந்த நாவல். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதக் கூடியவர்.  அவருடைய புத்தகப் பட்டியலை இங்கு அளிக்கிறேன் : 1. புலி நகக் கொன்றை 2. கலங்கிய நதி 3. திரும்பிச் சென்ற தருணம் 4. மேற்கத்திய ஓவியங்கள் 5. அக்கிரகாரத்தில் பெரியார்.  இது என்னுடைய பத்தாவது பேட்டி.








Comments