அழகியசிங்கர்
சாகித்திய அக்காதெமி ந பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரண்டு புத்தகங்கள் தயாரித்தன. ஒன்று பிச்சமூர்த்தியின் கவிதைகள். இரண்டு பிச்சமூர்த்தியின் கதைகள். கவிதைகளைத் தொகுத்தவர் ஞானக்கூத்தன். கதைகளைத் தொகுத்தவர் வெங்கட் சாமிநாதன். சாகித்திய அக்காதெமி அன்று நடத்தியக் கூட்டத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மானிடமிருந்து பிச்சமூர்த்தியின் கவிதைப் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். ஒரு நிமிடம் நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்துகொண்டோம்.
காலையில் அப்துல் ரஹ்மான் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன். அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Comments