Skip to main content

எது உண்மை?


அழகியசிங்கர்





பாரதியார் சுதேசமித்ரிரனில் சேர்ந்ததைப் பற்றி இரண்டு வித கருத்துகள் இருக்கின்றன. இதில் எது உண்மை?

1) பாரதியார் 'சுதேசமித்திர'னில் எப்படிச் சேர்ந்தார் என்பதைப் பற்றி மாறுபட்ட விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாரதி மதுரையில் தமிழ்ப் பண்டிதராக இருந்த சமயத்தில் ஜீ. சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்ததாகவும், அப்போது அவருக்கு பாரதி அறிமுகமானதாகவும், பாரதியின் மேதையை உடனே அறிந்து கொண்ட அவர் எப்படியாவது அவரைச் சென்னையில் தம் பத்திரிகைக்குக் கொண்டு செல்ல விரும்பியதாகவும், அதன்படி பாரதியைச் சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னதாகவும் வரா. கூறுகிறார்.

2) சேதுபதி ஹைஸ்கூல் வேலை முடியும் சமயம், பாரதி தமது உறவினரும் சென்னை போதனா முறைக் கல்லூரி வைஸ் பிரின்ஸ்பாலுமான லக்ஷ்மண ஐயர் என்ற சென்னை வாசிக்கு எழுதியதாகவும், லஷ்மண ஐயர் தமது நண்பரொருவர் மூலம் விசாரித்து, மிகுந்த சிபாரிசின்பேரில் வேலை வாங்கிக் கொடுத்ததாயும் சிலர் கருதுகிறார்கள்.

Comments