Skip to main content

ஒரு கவிதை


அழகியசிங்கர்




        அய்யனாரைக் கேட்கிறேன்
அய்யானரைக் கேட்கிறேன்
நியாயமா அய்யனாரே
திக்கற்று சுழன்றோடும் போராட்ட மக்களைச்சுடுவது

அய்யனாரே ஏன் இப்படி நடந்தது
கையில் ஆயுதமின்றி
எதிரில் நிற்கும் மக்களைச் சுடுவது
என்ன நியாயம்?
சுடுபவனுக்கு மனித மனம் இல்லையா?
குடும்பம் இல்லையா
எங்கும் காக்கை குருவி சுற்றுகின்றன அய்யனாரே

ஏன் இப்படி நடக்கிறது
போராடும் மக்களைக் கூப்பிட்டு
நாலு வார்த்தைப் பேசாமல் சுடலாமா?

யார் பிடிவாதம் பிடிக்கிறார் அய்யனாரே

செய்தியை அறிந்தவுடன்
மனம் பதறி விட்டது
நாம் இருக்கும் இடத்திலா அய்யனாரே

மன்னிக்க முடியாத குற்றம் அய்யனாரே
யார் கேட்பது அய்யனாரே?  நீர்
கேட்பீரா அய்யனாரே...


Comments