அழகியசிங்கர்
நவீன விருட்சம் 105வது இதழ் வந்துவிட்டது. உண்மையில் மார்ச்சு மாதம் வந்திருக்க வேண்டும். கொண்டு வர முடியவில்லை.
ஏப்ரல் முதல் வார்த்திலாவது எப்படியாவது முடித்திருக்க வேண்டும். முடியவில்லை. மே மாதம்தான் முடிந்திருக்கிறது. என் மேலேயே எனக்குக் கோபம். ஏன் முடிக்கமுடியவில்லை என்று. பத்திரிகையை ஆரம்பித்து முடிக்கும்போது ஒருவித ரிதம் உருவாகிறது. அப்படியே அதைக் கொண்டு போனால் எளிதாக பத்திரிகையை முடித்துவிடலாம். பத்திரிகையை முடித்தவுடன் என் கவனம் சிதறி விடுகிறது. பத்திரிகையை அனுப்புவதில் பல நாட்கள் எடுத்துக்கொள்கிறேன். பத்திரிகையை உருவாக்கும் ரிதம் சிதறி விடுகிறது.
************
இதோ பத்த்திரிகையை எடுத்துக் கொண்டு வருகிறேன். யார் கண்ணிலும் படாமல் ஜாக்கிரதையாகத்தான் எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த முறை 7 பன்டில். என் வீட்டில் உள்ளவருக்கு இந்தப் பன்டில் கண்ணில் படாது. படக்கூடாது. நான் விருட்சம் 105 வந்து விட்டது என்று உற்சாகமாகக் கத்துகிறேன். என்னை அறியாமல். இன்னொரு குரல் பலமாக ஒலிக்கிறது. üஎப்போது நிறுத்தப் போகிறீர்கள்?ý இதோ என் வீட்டிலேயே எதிர்ப்புக் குரல். 30 ஆண்டுகளாக இந்த எதிர்ப்புடன்தான் பத்திரிகையை நடத்திக்கொண்டு வருகிறேன்.
***************
இந்த முறைதான் இந்தக் கேள்வி என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் அவரவவர் விருப்படி இருக்கிறார்கள். ஒரு இதழ் நவீன விருட்சம் விலை : ரூ.20 தான். 80 பக்கங்கள் அடிக்கிறேன். எனக்கு 500 பேர்கள் தேவை. ஒவ்வொருவரும் ரூ.20 கொடுத்து என் பத்திரிகையை வாங்க விரும்ப மாட்டார்களா? ஏன் 20 ரூபாய் கொடுக்க விரும்பவில்லை. நான் தினமும் ரூ.20க்கு காப்பிக் குடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது நவீன விருட்சம் மாதிரியான ஒரு பத்திரிகையை என்னிடம் கொடுத்தால் ரூ.20ஐக் கொடுத்து வாங்கி கண்ணில் ஒற்றிக்கொள்வேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை வருகிறது. ரூ.20 ஒன்று மில்லை. எனக்குத் தேவை 500 பேர்கள்.
**********
இந்த இதழில் 6 சிறுகதைகள், 10 கவிதைகள், ஒரு அஞ்சலி கட்டுரை, நிகனோர் பார்ரா வின் மொழிப்பெயப்புக் கட்டுரை, ஒரு புத்தக விமர்சனம். இதோ கீழே விபரம் அளிக்கிறேன்.
1. கடிதம் - வளவ துரையன்
2. விவேகம் - கவிதை - வைதீஸ்வரன்
3. பிணை - சிறு கதை - சிந்துஜா
4. பரீக்ஷா ஞாநியும் நானும் - அஞ்சலி - அழகியசிங்கர்
5. அன்ன பூரணேஸ்வரி - கவிதை - லாவண்யா சுந்தர்ராஜன்
6. லூனா பூக்களின் பருவம் - ஸ்ரீசங்கர்
7. ஜன்னலிலிருந்து புறாக்கள் பறப்பதைப் பார்த்தல்
மொழிபெயர்ப்பு கவிதை - க்ருஷாங்கினி
8. வாக் - சிறுகதை - அழகியசிங்கர்
9. ஆதி வராகம் - சிறுகதை - பா ராகவன்
10. ஜிட்டு கிருஷ்ணமணி - சிறுகதை - சிறகு இரவி 045
11. வெளியே செல்லத் தயாராகிறது - கவிதை - ஜான்னவி
12. ஜான்ஸி கவிதை
13. கண்மறை துணி-புத்தகவிமர்சனம்-கலாப்ரியா
14. பிரதீபன் கவிதை
15. கடித இலக்கியம் - டாக்டர் ஜெ பாஸ்கரன்
16. நீதி - சிறுகதை - பானுமதி ந
17. சர்மாவைப் பின்பற்றுதல் - கவிதை - பயணி
18. சற்றுமுன் தூறலாய்ப் பெய்த மழை - கவிதை - சிபி
19. முடிவு - சிறுகதை - டாக்டர் ஜெ பாஸ்கரன்
20. எதிர்க் கவிதையின் பிதா மகன்-நிகனோர்-
பார்ரா (1914-2018)-ராஜேஸ் சுப்பிரமணியன்
பார்ரா (1914-2018)-ராஜேஸ் சுப்பிரமணியன்
21. சுந்திரமித்திரன் கவிதை
21. உரையாடல்
இன்னும் பல படைப்பாளிகளின் படைப்புகள் தேர்ந்தெடுத்துள்ளேன். அடுத்த 106வது இதழ் ஜøலை மாதம் வரும்.
Comments