Skip to main content

ஸ்டால் எண் 12...

அழகியசிங்கர்



                                      ஒன்று

நடந்து முடிந்த புத்தகக் காட்சியைப் பற்றி நடந்து முடிந்த அடுத்த நாள் சொல்வது சரி என்று தோன்றுகிறது.  சென்னை புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வது பற்றி விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது.  போஸ்டல் காலனி வீட்டில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தபோது, கீழே உள்ள குடியிருப்பவர், ஒரு கவரை கொண்டு வந்தார்.  அந்தக் கவரை திறந்து பார்த்தால் சென்னை புத்தகத் திருவிழாவின் விண்ணப்பம்.  ஜøலை 21ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை.
அந்தச் சமயத்தில் நானும் என் நண்பர் கிருபானந்தனும் எம்ஜி ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த 3 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருந்தோம். அது மோசம்.  இந்தக காலத்து கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்புவதில்லை.  வேடிக்கைப் பார்க்க வருகிறார்கள்.  செல்போனை திருகுகிறார்கள்.  கூட்டமாக நின்று காஸ்மாடிக் கடையில் நின்று காஸ்மாடிக் வாங்குகிறார்கள. புத்தகக் கடையில் நிற்கக் கூட இல்லை.  என்ன சொல்கிறார்கள் என்றால் வீட்டில் புத்தகம் வாங்க பணம் கொடுப்பதில்லை என்கிறார்கள்.  உண்மையா என்பது தெரியவில்லை. 
கிருபானந்தனைப் பார்க்கும்போது, இதுமாதிரி ஒரு விண்ணப்பம் வந்திருக்கிறது.  நீங்கள் சரி என்று சொன்னால் கலந்து கொள்ளலாம் என்றேன்.  ஒரு நாள் கழித்துச் சொல்வதாக சொன்னாôர் கிருபா.  அடுத்தநாள் சரி என்றார்.  நானும் நீங்களும்தான்..சுரேஷ்ஷைக் கூப்பிட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்றேன்.  
டிடி எடுக்கம்போது சற்று உறுத்தல்.  ரூபாய் 15500 என்ற உறுத்தல்தான்.  புத்தகக் காட்சியில் புத்தகம் விற்று திரும்பவும் பணம் கிடைத்துவிடுமா என்ற ஐயம் எனக்கு இருந்துகொண்டிருந்தது.  இது என்ன பெரிய தொகை.  போனால் போகிறது என்று எண்ணத் தோன்றாது.  
முதல்நாள் மதியம் 3 மணிக்குமேல் போஸ்டல் காலனியில் உள்ள வீட்டில் உள்ள புத்தகங்களை வெளியே எடுத்து 7 இரும்பு அலமாரிகளை காலி செய்து வைத்துக்கொண்டேன்.  புத்தகங்களை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டேன்.   எல்லாத் தலைப்புகளில் உள்ள புத்தகங்களிலிருந்து ஐந்து ஐந்தென்று எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 10 பெட்டிகள் நிரப்பியிருப்போம்.  பில் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டோம்.  
பழைய விலைப் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டோம்.  பின் டெம்போவைக் கூப்பிட்டு கிளம்பி விட்டோம். டெம்போ காரரிடம் பேரம் பேசினேன்.  ரூபாய் 1700க்குக் குறைவாக வர முடியாது என்று சொல்லிவிட்டார்.  திரும்பவும் கொண்டு வருவதற்கு நீங்கதான் வர வேண்டுமென்று சொன்னேன்.  சரி என்றார். ஆனால் ரூ.15500லிருந்து திரும்பவும் 3400 ரூபாயைச் சேர்த்தால் கிட்டத்தட்ட 19000 ரூபாய். பக் பக்..முன்பு இதே நிலையில் இன்னும் பக் பக் பக் பக் என்றிருப்பேன். புத்தகம் போடுகிறோம், புத்தகத்தைக் கொண்டு வந்து வைக்கிறோம், பின் புத்தகத்தை யாரும் வாங்க வராவிட்டால் என்னவாவது.  ரொம்ப யோசித்தால் பக் பக் பக்.  
கிருபாவும் நானும் முதல் நாள் வந்தவுடன், சுரேஷையும் கூப்பிட்டோம்.  அன்றே கிளம்பி சுரேஷ÷ம் வந்துவிட்டார்.  அப்போதுதான் ஒரு சம்பவம் நடந்தது.  புத்தகங்களை அடுக்கும்போது டேபிள் மேலே கிருபா தன்னுடைய ùஸல்போனை வைத்துவிட்டு புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.  யார் வந்தார்கள் என்பது தெரியவில்லை செல்போன் மாமயமாக மறைந்து விட்டது.  புத்தகங்களை அடுக்கிய பிறகு கிருபா வேற ஒரு செல்போன் வாங்கச் சென்று விட்டார். எனக்கோ புத்தகம் விற்க ஆரம்பிக்கும்போதே இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை பிடித்துக் கொண்டது.  
                                                                    (இன்னும் சொல்கிறேன்)

Comments