Skip to main content

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது


பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது


கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது


பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,


புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.


ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

Comments

நல்ல கவிதை... நிரந்தரமற்ற சில தீர்மானங்கள் மீண்டும் மீண்டும் மீண்டும் நாம் எடுத்துக் கொண்டு இருப்பவைதான்...நம் பேச்சில் பிறர்நலமும் இருக்கத்தானே செய்கிறது...
மிக்க நன்றி நீலகண்டன்:)! பிறர் நலம் இருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால் பிறர்..?