நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நான் கும்பகோணம் பக்கத்தில் உள்ள எந்த ஊரில் இருப்பேன் என்பது தெரியது. எனக்குப் பிடித்த ஊரான மாயவரத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த கம்ப்யூட்டரெல்லாம் இங்கயே வைத்துவிட்டுப் போய்விடுவேன். சில காலம் அங்கு பழகி, வேறு கம்ப்யூட்டரில் என்னை நுழைத்து திரும்பவும் எல்லாம் கொண்டு வர வேண்டும்.
இந்த முறை எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை.
ஏன் பிடிக்கவில்லை? என் அப்பாவிற்கு வயது 88 ஆகிறது. அவரை விட்டுப் போவது ஒவ்வாத விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. என் அப்பா என்னை மாதிரி ரொம்ப சாதுவான மனிதர். நல்ல மனிதர். யாருடன் சண்டைக்குப் போக மாட்டார். கொடுத்ததைச் சாப்பிடுவார். பலருக்கும் உதவி செய்யும் நோக்கம் உடையவர். 88வது வயதில் கூட வெற்றிலைப் பாக்குக் கூட போட மாட்டார்.
எனக்குப் பிடித்த ஊரான மாயூரம் கிடைத்தால், நான் என் அப்பாவை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைப் பார்த்துவிட்டு திங்கள் மாயூரம் போவேன். ஆனால் ஆண்டவன் சித்தம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத்தில் இருக்கும் என் பெண்ணை போனில்தான் பேசமுடியும் நினைத்தால் போய்ப் பார்க்க முடியாது.
எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத்தில் இருக்கும் என் பெண்ணை போனில்தான் பேசமுடியும் நினைத்தால் போய்ப் பார்க்க முடியாது.
எனக்கு சர்க்கரை நோய் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயும் கூட சேர்ந்து இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியாமல் கூட போய்விடுகிறது. சமீபத்தில் நான் எடுத்த ரிப்போர்ட்டில் சர்க்கரை அளவு கடந்து போயிருந்தது. தனியாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பாவிற்கு சர்க்கரையும் இல்லை. உயர் ரத்த அழுத்தமும் இல்லை.
என்ன புத்தகங்கள் படிக்கப் போகிறேன்? எது மாதிரி எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். நவீன விருட்சம் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பேன்.
எப்போதும் நான் வெளியிடும் புத்தகங்கள் 100 பிரதிகள் கூட விற்பதில்லை. விற்பனையாளர்கள் பணம் தருவதில்லை. நானே ஏமாந்து இலவசமாகப் புத்தகங்களைக் கொடுத்து விடுவேன். இந்த முறையும் 4 புத்தகங்கள் கொண்டு வருகிறேன். ஒரு புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் 'இயல்பு நிலை' . மொழி பெயர்த்தவர் திறமையானஎன் நண்பர். இன்னொரு புத்தகம் ஞானக்கூத்தனின் கவிதைக்காக என்ற புத்தகம். கவிதைகளைப் பற்றிய நுணுக்கம் நிரம்பியகட்டுரைகள் அடங்கிய புத்தகம். மூன்றாவது புத்தகம் சில கதைகள் என்ற என் குறுநாவல்கள் தொகுதி. நான்காவது புத்தகம். பிரமிளின் விடுதலையும் கலாச்சாரமும் என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம்.
நவீன விருட்சம் வெளிவந்து 21 ஆண்டுகள் முடிந்து 22 ஆண்டின் துவக்கத்தில் 85வது இதழ் வெளிவருகிறது. கையைப் பிசைந்து கொண்டிருக்கிறேன். மாற்றல் ஒரு பக்கம். சக்கரை நோய் இன்னொரு பக்கம். யாராவது உதவி செய்வார்களா என்று போய்க் கேட்டால் எப்படிப் பேசுவது என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. வயது கூடிக்கொண்டே போகிறது. வினயம் தெரியவில்லை. சரி அது போகட்டும் நடப்பது நடக்கட்டும். நாராயணன் செயல் என்பார் என் அப்பா. ஒரு விதத்தில் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
Comments
காலநிர்ப்பந்தம் உங்களைப் பழகிய மனிதர்களிடமிருந்தும் கணினியிடமிருந்தும் விலகச் செய்கிறது. நல்லபடியாகப் போய்வாருங்கள். எல்லாம் இனிதே நடக்கும் நண்பரே.
உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருகின்றது.
Sir,..your efforts and courage to publish books by notable and upcoming writers is extraordinary.
Sir I am very much certain that it is not very long before your contributions to modern Tamil literature are well recognized and appreciated.
I pray to God for your health and success in your future endeavors.-
Sir,..your efforts and courage to publish books by notable and upcoming writers is extraordinary.
Sir I am very much certain that it is not very long before your contributions to modern Tamil literature are well recognized and appreciated.
I pray to God for your health and success in your future endeavors.-