Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 123


அழகியசிங்கர்  


நடுமதியத்தில்


தூரன் குணா                                                                   


நடுமதியத்தில் 
புகைவண்டி நிலையத்தின் 
நடைபாதைக்கூரையின் கீழ் 
முன் நாற்காலியில் 
கருநிற முதுகு 
பாதி தெரிய 
உயரக்கொண்டை இட்டிருந்தவளின் 
அடர்வண்ண 
பூச்சணிந்த நீளநகங்கள் 
பின் நீண்டு
தண்டுவடக் குழிவில் 
ஒட்டியிருந்த 
என் கண்களைப் பிடுங்கி 
தண்டவாளங்களுக்கிடையில் 
எறிந்தன

வெயிலில் நெளியும் தண்டவாளங்கள் 
அதிரத்தொடங்கிய முதல் நொடியில்
கீழொன்றும் மேலொன்றுமாய் 
பிணைந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளை 
கண்ட காட்சியை 
கடைசி முறையாய் 
நினைவிலிருந்து மீட்டிவிட்டு 
அணையத்துவங்கின கண்கள். 


நன்றி : கடல் நினைவு - தூரன் குணா - வெளியீடு : தக்கை - 15 திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3 - முதல் பதிப்பு : ஜøலை 2012 - விலை : ரூ.35 - பக்கங்கள் : 80


  

Comments

Popular posts from this blog