Skip to main content

பதினோராம் நாளின் வாசிப்பனுபவம் (12.09.2019)

அழகியசிங்கர்ர கி ர டைம்ஸ் என்ற புத்தகத்தில் ரா.கி ரங்கராஜன் அவர்கள் எது பாஸில்வங கண்ணோட்டம்? என்ற கட்டுரை எழுதி உள்ளார்.  ஜெர்ரி ஒரு ரெஸ்ட்டாரன்டின் சொந்தக்காரர்.  அவரிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு கடவுள் மாதிரி.   அவர்களுக்கு என்ன பிர்ச்னை என்றாலும் தீர்த்து வைப்பார்.  எதிலும் பாஸிடிவ் கண்ணோட்டம் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவார்.
ஒருமுறை இவருடைய ரெஸ்ட்டாரண்டுக்குள் இரவில் சில கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்டார்கள்.  பின்புறக் கதவைப் பூட்டாமல் வந்ததுதான் காரணம் என்று ஊகித்தவர் இனி அப்படி அஜாக்கிரதையாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டாரே தவிர இப்போது இப்படி ஆயிற்றே என்று புலம்பவில்லை.
கொள்ளைக்டகாரர்கள் ஜெர்ரியை கண்டபடி சுட்டுவிட்டுத் தப்பித்து விட்டார்கள்.  ஜெர்ரி ஆஸ்பத்ரிக்குக் கொண்டு செல்லப்பட்டார் üஉங்களுக்கு ஒன்றுமில்லை.  பயப்படாதீர்கள்,ý என்று டாக்டர்கள் சொன்ன போதிலும் அவர்களுடைய முகங்களில் பயம்.  ஒரு நர்ஸ் அவரிடம், உங்களுக்கு எதிலாவது அலர்ஜி உண்டா என்று கேட்கிறாள். உடனே ஜெர்ரி அவளைப் பார்த்து, 'ஆமாம்.  தோட்டா எனக்கு அலர்ஜி,' என்று சொன்னதும் சுற்றியிருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் சிரித்துவிட்டார்களாம்.  
'செத்துப் போகப் போகிறவனுக்கு ஆபரேஷன் செய்வதாக நினைக்காதீர்கள்.  உயிருள்ளவனுக்கு ஆபரேஷன் செய்யப் போகிறோம் என்று நினையுங்கள்.  நான் பிழைத்து விடுவேன்,' என்கிறார் ஜெர்ரி.  பிழைத்தும் விடுகிறார். 
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் 'இனி இல்லை மரணபயம்' என்ற புத்தகத்தைப் படிக்கும்போது சில தினங்களுக்கு முன் படித்த புத்தகத்திலிருந்து இந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
'வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறையான தொகுப்பு அல்ல இந்த நூல்.  செத்து செத்து பிழைப்பவர்களை சாகாமல் காக்கும் நூல் இது' என்கிறார் முன்னுரையில் சந்தியா நடராஜன்.
இத் தொகுப்பில் மரணத்தின் நினைவில் சாமுராய் என்ற கட்டுரை சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது.  
ஒருவர் மரண நினைவுடன் வாழ்ந்தால் அதிக நாட்கள் வாழ்நாளை நீடிப்பார் என்ற கருத்தை முன் வைக்கிறார் தொகுப்பாசிரியர்.
மரணத்திற்காக துக்கப்படுவதில்லை என்ற மகாத்மா காந்தியின் கட்டுரையில், காந்தியின் மரணம் பற்றி ஜார்ஜ் பெர்னாட் ஷா குறிப்பிடுவது வருகிறது.
மிக மிக நல்லவனாக இருப்பது எப்படிப்பட்ட ஆபத்து என்பதை காந்தியின் மரணம் காட்டுகிறது என்று.
மகாபாரதம், பைபிள், பகவத் கீதை, ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, நிஸகர்கத்தா மஹாராஜ் போன்ற பல புத்தகங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடுகிறார்.
அங்கங்கே சின்ன சின்ன கதைகளையும் கொடுத்திருக்கிறார்.
ஜென் துறவியிடம் ஒருவன் கேட்டான் :
'நூறு ஆண்டுகள் கடந்தபின் நீங்கள் எங்கே போவீர்கள்?' 
'நான் ஒரு குதிரையாகவோ கழுதையாகவோ மாறி விடுவேன்?' இது துறவியின் பதில்.
'பிறகு?' அந்த மனிதன் கேட்டான்.
'நரகத்திற்குச் செல்வேன்,' 
'நீர் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்,' என்று கேட்கிறான்.
'உனக்கு போதனை செய்ய நரகத்திற்கு நான் போகாமல் வேறு யார் போவார்?' 
துறவியின் பதிலில் மிரண்டு போனவனுக்கு ஒன்று புரிந்தது.
தூய்மையான இடங்கள் மட்டுமே புத்தன் உறையும் இடங்கள் இல்லை.  எல்லா இடங்களிலும் புத்தன் நிறைந்துள்ளான் சொர்க்கத்தில் புத்தன் இருந்தாலும் நரகத்திலும் அவன் தேவைப் படுகிறான்.
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும் 

என்று ஜென்மம் நிறைந்தது என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை வரிகளுடன் இப் புத்தகம் முடிவடைகிறது.
முன்னுரையில் ஆசிரியர் இப்படி குறிப்பிடுகிறார் : üஒரே இரவில் என் உயிர் வெற்றிகரமாக ஒரு பரமபத ஆட்டம் ஆடியது.  மரணத்தின் விளிம்பைத் தொட்டும் தொடாமலும் உயிர்பிழைத்தேன் என்கிறார். கவனிக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

Comments

Popular posts from this blog