எறும்பும் புறாவும்...
அழகியசிங்கர்
என் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய பேப்பர் கடை இருக்கிறது. அங்கு சில வினோதமான புத்தகங்கள் கிடைக்கும். அப்படி ஒரு புத்தகம்தான் லேவ் தல்ஸ்தோய்யின் எறும்பும் புறாவும் என்ற புத்தகம். இது ஒரு சிறார் புத்தகம்.
இக் கதைகளில் நீதி நேரிடையாக போதிக்கப்படவில்லை. நீதி மறைமுகமாகப் புகட்டப் படுகிறது. ஒவ்வொருவரும் இக் கதையை வாசிக்கும்போது அது தெரியப்படுத்தும் வாழ்க்கை உண்மையை உணர்ந்து கொள்ள இயலும். இதில் இருந்து ஒரு கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
ஆண் குதிரையும் பெண் குதிரையும்
பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதி ரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மேய்ந்து பகலில் உழுதது. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:
''என் நீ உழுகிறாய்? உன்னிடத்தில் நானாக (இருந்தால் போகவே மாட்டேன். அவன் என்னைச் சாட்டையால் அடிப்பான் என்றால் நானோ அவனைத் திரும்ப உதைப்பேன்.''
மறுநாள் ஆண் குதிரை பெண் குதிரை சொன்னது போலச் செய்தது. அது கீழ்ப்படியாமல் போய்விட்டதைக் கண்ட அதனது எசமானன் அதற்குப் பதிலாக உழுவ அதற்குப் பெண் குதிரைக்குக் கடிவாளம் மாட்டினான்.
Comments