Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 103

அழகியசிங்கர் 

அணு முட்டை


மாலதி மைத்ரி



ஒரு குடம் நீரை
ஒரு கூடை மீனை
ஒரு மூட்டை தானியத்தை
ஒரு கட்டு புல்லை
ஒரு சுமை விறகை
சுமப்பது போல்
அவள் கர்வத்துடன்
உலகைச் சுமந்தலைந்தாள்
பெரிய தலையுடன்
ஒளிரும் வால் நட்சத்திரமாய்
வசீகரமாய் இருந்தாள்
தன் குஞ்சுக்கு
இரையூட்டும் பறவையென
உலகை ஊட்டிக் காத்தாள்

ராட்சஸப் பறவையாய் வளர்ந்த அது
அவள் தலைமேல்
அணுவுலையை
முட்டையிட்டு அடைக்காக்கிறது.

நன்றி :  முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை - மாலதி மைத்ரி - பக்கங்கள் : 92 - விலை : ரூ.90 - அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3 முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110 - பேசி : 998454175, 9599329181

Comments