அழகியசிங்கர்
 44 ஆண்டுகள் 306 கவிதைகள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழ் கிசையில் என் கவிதைத் தொகுதியைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  இந்தக் குறிப்பை வெளியிட்ட இந்துவிற்கு என் நன்றி உரித்தாகும். 
 இந்துவில் பிரசுரிக்கப்பட்ட குறிப்புகளை இங்கு தருகிறேன். 
 'தமிழின் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் என இரண்டு தலைமுறைகளுக்கும் இலக்கியப் பாலமாக 'நவீன விருட்சம்' 'இதழை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் அழகியசிங்கர். 
 சமீபத்தில், தனது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்ட அழகியசிங்கர், அடுத்து தனது கவிதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை 306 கவிதைகளை எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 44. சொந்தமாக இலக்கிய இதழ் நடத்தியும் இவ்வளவு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்பதே இந்தக் காலத்தில் ஆச்சர்ய்மான செய்திதான்.' - தொகுப்பு : மானா பாஸ்கரன், மு.முருகேஷ். 

Comments