Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 105



அழகியசிங்கர்  


பிளாஸ்டிக்கை சுவைத்தலும் சுவை கூட்டல் உத்திகளும்


றாம் சந்தோஷ்




பிளாஸ்டிக் சுவைப்பதை
நான் முதலில்
ஒரு கழுதையிடமும்
பிறகு இரண்டு நாட்டு, ஜெர்ஸி மாடுகளிடமும்
கற்றுக் கொண்டேன்
அவற்றின் பற்களைப் போன்றே
நல்ல திடமானவைகளுக்கு
நாம் நம் கடைவாய்ப் பற்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாயினுள் திணித்து மெல்லும்போது
சுவிங்கம் போல் ஒட்டாது, இம்சிக்காது;
கரைந்தும் போகாது; காசும் மிச்சம்.
நல்ல சுவைக்கு
ஒன்று : உங்கள் எச்சில் சுவையாக இருக்க வேண்டும்.
அல்லது : பிளாஸ்டிக் மண்ணிடைப்பட்டதாய் இருக்க வேண்டும்.


நன்றி : சொல் வெளித் தவளைகள்  - றாம் சந்தோஷ் - வெளடியீடு : சொன்மை பதிப்பகம், 25 முதல் தளம், எம்.எல்.ஏ அலுவலகம் எதிரில், ஜின்னா ரோடு, காதர் பேட்டை, வாணியம்பாடி 635 751  பக்கங்கள் : 100 - விலை : 110 



Comments