அழகியசிங்கர்
கடந்த இரண்டாண்டுகளாக விருட்சம் இலச்கியச் சந்திப்புகளை மூகாம்பிகை காம்பளெக்ஸில் நடத்தி வருகிறேன். கூட்டம் ஆரம்பிக்கும்போது ஏதுமாதிரியான கூட்டம் என்ற எண்ணம் இல்லாமலிருந்தேன். முதல் கூட்டத்தில் ஜானகிராமனைக் குறித்து திரூப்பூர் கிருஷ்ணன் பேசியவுடன் கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பது புரிந்தது.
ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் சொல்வது அல்லது வாசகர் சொல்வது என்பதுதான் கூட்டத்தின் தன்மை என்பது புரிந்துவிட்டது.
இக் கூட்த்தில் பேசுவதை ஆடியோவோ வீடியோவோ எடுத்து அதை எல்லோருக்கும் தெரிவிக்கிறேன். இந்த மாதம் ஆர் வெங்கடேஷ் ஆதவன் குறித்துப் பேசியது முக்கியமானதாகக் கருதுகிறேன்.
பல எழுத்தாளர்களை நாம் மறந்துகொண்டே வருகிறோம். அதேபோல் ஆதவனையும் மறந்து விடுவோம். ஆதவன் பற்றி வெங்கடேஷ் பேச ஏற்பாடு செய்தபிறகு நானும் ஆதவன் சிறுகதைகள் தொகுதியை எடுத்து கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அப்பர் பெர்த் என்ற ஆதவன் கதையை இன்றுதான் படித்து முடித்தேன். ஏற்கனவே படித்ததுதான். 19.09.2011 இந்தக் கதையைப் படித்திருக்கிறேன். பின் சுத்தமாக இந்தக் கதை மறந்து விட்டது. இந்தக் கதையில் வருகிற சிதம்பரத்திற்கு மூன்று பெண்களுடன் ஏற்படும் சல்லாபம்தான் இந்தக் கதை. ரொம்ப ஜாக்கிரதையாக எழுதப்பட்ட கதை.
Comments