Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 107


அழகியசிங்கர்  



ப்ரியாராஜ் கவிதை 





சிறுவயதில் கனவில் நான்
வந்தியத்தேவன்!
குதிரையையும், குந்தவியையும்
தேடிக் களைத்திருந்தேன்!

பின்னாளில் நான் பாரதியாய்
மீசையுடன் மாறி கவி எழுதி
தோற்றிருக்கிறேன்!

பாம்பு சட்டையை உரிப்பதுபோல
நான் அவ்வப்போது, சிவாஜியாய்,
ரஜினியாய், கமலாய் மாறி கனவில்
நாயகிகளைப் புணர்ந்திருக்கிறேன்!

ஆனாலும்,
இப்போதெல்லாம் நான் நானாக
இருக்க ஆசைப்படுகிறேன்!
முடியவில்லை! பழக்க தோஷம்!


நன்றி : இன்னொரு முகம் - ப்ரியாராஜ் - வெளியீடு : சந்தியா பதிப்பகம், ப எண் : 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 - பக் : 160 - விலை : ரூ.80 - வெளியான ஆண்டு : 2009 

Comments